Hula Hoopல் அசத்தும் மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா, என்னெல்லாம் வித்த காமிக்குறாங்க – வைரலாகும் வீடியோ இதோ.

0
860
Raveena
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை என குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா.

-விளம்பரம்-

இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படத்தில் நடித்து இருந்தார். இருந்தாலும் இந்த திரைப்படத்தில் இவர் பிரபலம் அடையவில்லை என்றாலும், விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படத்தில் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்த்திழுத்தார் ரவீனா. இந்த படத்தில் இவர் அம்மு அபிராமியின் பள்ளித் தோழியாக நடித்து இருந்தார். மேலும், ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் கூட இவர் தான் நடித்திருந்தார்.

- Advertisement -

ரவீனா திரைப்பயணம்:

அதே போல இவர் விஜய்யின் ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். படத்தில் ஒரு காட்சியில் வெடி குண்டால் ஒரு இடம் வெடித்து தீப்பற்றி எரியும். அந்த இடம் இருந்து ஒரு பெண் குழந்தை மேலே இருந்து விழும். அந்த குழந்தையை தளபதி விஜய் அவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பார். அந்த குழந்தை தான் ரவீனா தஹா. இது பலரும் அறியாத ஒன்று. இப்படி இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து உள்ளார். ரவீனா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

ரவீனா நடிக்கும் சீரியல்கள்:

இவர் நடிகை மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் பலவற்றிலும் கலந்து தன் திறமையை காண்பித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் படு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி வந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது ரவீனா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து இருந்தார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌன ராகம் 2’ என்ற தொடரில் நடித்து வருகிறார். முதல் சீசனை போல இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மௌன ராகம் 2 சீரியல்:

லாக் டவுன் காரணமாக முதல் சீசன் நிறுத்தப்பட்டது. பின் கடந்த வருடம் தான் மௌன ராகம் சீசன் 2 தொடங்கப்பட்டது. இந்த தொடரில் சக்தி என்னும் கதாபாத்திரத்தில் ரவீனா நடித்து வருகிறார். சீரியலில் சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது. பின் இவரின் தங்கை ஸ்ருதிக்கும் சில தினங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. தற்போது சக்தியை வீட்டை விட்டு துரத்த திட்டம் போடுகிறார்கள். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, நடிகை ரவீனா அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

ரவீனாவின் அசத்தல் நடன வீடியோ:

இவர் அடிக்கடி தான் நடத்தும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்கள் என ஏதாவது ஒன்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார். இதனால் இவரை சோஷியல் மீடியாவில் எக்கச்சக்கமான பேர் பாலோ செய்கிறார்கள். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் படு பேமஸ் ஆகி வருகிறது. அப்படி என்ன வீடியோ ரவீனா போட்டு இருக்கிறார் என்றால், Hula Hoop போட்டு கொண்டு ரவீனா செம ,மாஸாக நடனமாடியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு ]ரசிகர்கள் பலரும் லைக் செய்தும் பாராட்டியும் வருகிறார்கள்.

Advertisement