‘பிறந்தநாளுக்கு சொகுசு காரை பரிசளித்துள்ள ரவீனாவின் அம்மா ‘ – அவர் வயசும் கார் விலையும் ஒன்னு

0
522
raveena
- Advertisement -

பூவையாரை அடுத்து விஜய் டிவி பிரபலம் ரவீனா சொந்தக்கார் வாங்கி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக மீடியாவிற்குள் நுழைந்தார். இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படத்தின் மூலம் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்த்திழுத்தார் ரவீனா.

-விளம்பரம்-

இந்த படத்தில் இவர் அம்மு அபிராமியின் பள்ளித் தோழியாக நடித்து இருந்தார். மேலும், ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் கூட இவர் தான் நடித்திருந்தார். அதே போல இவர் விஜய்யின் ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இப்படி இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். ரவீனா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ரவீனா நடிக்கும் சீரியல்கள்:

இவர் நடிகை மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி என பலவற்றிலும் கலந்து தன் திறமையை காண்பித்து வருகிறார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌன ராகம் 2’ என்ற தொடரில் நடித்து வருகிறார். முதல் சீசனை போல இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லாக் டவுன் காரணமாக முதல் சீசன் நிறுத்தப்பட்டது. பின் கடந்த வருடம் தான் மௌன ராகம் சீசன் 2 தொடங்கப்பட்டது.

மௌன ராகம் சீரியல்:

இந்த தொடரில் சக்தி என்னும் ரோலில் ரவீனா நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரவீனா அவர்கள் சொந்தமாக கார் வாங்கி இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் கார் வாங்கி கொண்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. சிவானி நாராயணன், தாடி பாலாஜி, மைனா நந்தினி, சரத், புகழ், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஆஜித் போன்ற பல பேர் கார் வாங்கி அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

நடிகை ரவீனா வாங்கிய கார்:

சமீபத்தில் கூட விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பூவையார் கார் வாங்கி சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் தற்போது மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனாவும் புதிய கார் ஒன்று வாங்கி இருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து, என்ன ஒரு நாள் அது! 10.10.2022 என்ற இந்த நாளில் எனக்கு ஆச்சரியங்கள், சிரிப்பு, காதல், சிலிர்ப்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைந்தது. காரணம், இன்று என் அம்மா எனக்கு பரிசாக MG HECTOR PLUS கார் வாங்கி கொடுத்து என்னை ஆச்சரியப்படுத்தினார்.

நடிகை ரவீனா பதிவு:

அவரை என் அம்மா என்று அழைப்பதில் நான் எப்போதும் பெருமைப்படுவேன். அம்மா நீ இல்லாவிட்டால் என் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்திருக்கும். என் வாழ்வில் நீ இருப்பதற்கு நன்றி. என்னை பொருத்தவரை நீங்கள் தான் மிகச்சிறந்த நபர் என்று பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ரவீனாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரவீனா வாங்கிய காரின் விலை 19 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும், ரவீனாவிற்கு இது 19வது பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement