இரண்டு திருமணம் ஆகி, இரண்டு குழந்தை இருக்கும் நபரை திருமணம் செய்த மௌனம் பேசியதே பட நடிகை. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

0
405
- Advertisement -

மௌனம் பேசியதே பட நடிகை இரண்டு முறை திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளவரை மூன்றாவது முறை திருமணம் செய்து இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மௌனம் பேசியதே. இந்த படத்தில் சூர்யா, த்ரிஷா, லைலா, நந்தா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். காதலை வெறுக்கும் ஒரு நண்பன். காதலில் இருக்கும் நண்பன்.

-விளம்பரம்-

இருவரின் வாழ்க்கை சுற்றி நடக்கும் கதை தான் மௌனம் பேசியதே. காதலை வெறுத்து ஒதுங்கும் ஒருவன் காதலினால் எவ்வாறு மாறுகிறான், அவனது உணர்வுகளை துல்லியமாக காட்டும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். இந்த படம் அவருடைய திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நேஹா பெண்ட்சே.

- Advertisement -

நேகா நடித்த படங்கள்:

இவர் ஹிந்தி சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர். இந்தி சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின் தமிழில் இவருடைய முதல் படமே மௌனம் பேசியது தான். இந்த படம் வெற்றி காரணமாக இவர் தொடர்ந்து இனிது இனிது காதல் இனிது என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தமிழில் படங்கள் பெரிதாக அமையவில்லை. மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என பல மொழி படங்களிலும் நடித்து இருந்தார்.

நேகா சின்னத்திரை பயணம்:

ஆனால், இவர் நடித்த படம் எல்லாமே தோல்வியை தழுவியது. இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வராமல் போனதால் சீரியல் பக்கம் சென்றுவிட்டார். படங்களை விட நேகா அதிகமாக சீரியலில் தான் நடித்திருந்தார். சின்னத்திரை சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து இருந்தார். இப்படி பிசியான நடிகையாக இருந்த இவர் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

நேகா- ஷர்துல் பயாஸ் திருமணம்:

அதாவது இரண்டு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒருவரை நேகா மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து இருக்கிறார். இது நடிகை நேகாவின் முதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்துல் பயாஸ் என்ற தொழில் அதிபரை தான் நேகா திருமணம் செய்து கொண்டார். பூனேவில் மராத்திய முறைப்படி இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. இது குறித்து ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கேள்விகளை எழுப்பினார்கள். இதைப்பார்த்த நேகாவும் பதில் சொல்லாமல் இருந்தார்.

திருமணம் குறித்து நேகா கூறியது:

இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களின் கேள்விக்கு நேகா சோசியல் மீடியாவில் பதிலளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, நான் ஒன்றுமில்லாத விஷயத்தை செய்யவில்லை. நான் மட்டுமே ஒருத்தருக்கு மூன்றாம் தாரமாக போனதாக சொல்கிறீர்கள். பலரும் இப்படி திருமணம் செய்திருக்கின்றனர். அது அவர்களின் விருப்பம். தற்போது காலகட்டத்தில் இதெல்லாம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது என்று கூறியிருந்தார்.

Advertisement