தீபாவளி அன்று மெர்சலுடன் துணிந்து மோதும் படங்கள் .!

0
3782
Mersal

மெர்சல் தீபாவளிக்கு வெளியாகும் செய்தி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தீபாவளி பண்டிகை அன்று வரும் படங்கள் சற்று கூடுதலான வசூலை அள்ளும் என்பது நிதர்சனம் தான்.
Mersal
தீபாவளிக்கு மெர்சல் படம் சோலோவாக ரிலீசாகும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரு படங்கள் மெர்சல் உடன் சேர்ந்து தீபாவளிக்கு வெள்ளித்திரையில் வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் ஒன்று சசிகுமார் நடித்த ‘கொடிவீரன்’ படம் . மற்றொன்று வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மேயாத மான்’ திரைப்படம்.

இதையும் படிங்க: புறாவால் மெர்சல் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!

இந்த படமும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை வெளியிடும் அந்த போஸ்டரில் ‘மெர்சலான காளை வருதுங்க.. கூடவே துள்ளி மானும் வருதுங்க’ என பவ்வியமா தங்களது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.