தமிழ்நாட்டில் என்றென்றும் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியை அடைந்தாலும் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் விஜய் அவர்கள் 'தமிழக வெற்றிக் கழகம்' என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்தார்.

இதனால் நிர்வாகிகள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள் அது மட்டும் இல்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற ஆலோசனையை கூட்டத்தில் விஜய் கூறி இருந்தார். இதற்காக புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் முமரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

விஜய் அரசியல்:
அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு இறந்த குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். அதற்குப்பின் கடந்த மாதம், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் வகையில் கல்வி விழா ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவை இரண்டு கட்டமாக நடத்தி விஜய் மாணவர்களுடன் கலந்துரையாடி பரிசும் அளித்தார்.
அந்த சத்தம்...🔊🔥😉
— Tharani ᖇᵗк (@iam_Tharani) August 12, 2024
DMK MP "Kanimozhi" spoke about #ThalapathyVijay ✅#தமிழகவெற்றிக்கழகம்#TheGreatestOfAllTime
pic.twitter.com/238CIEjYl1
முதல் மாநாடு:
சமீபத்தில் விஜயின் முதல் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால், இது குறித்து தற்போது வரை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தனது முதல் அரசியல் மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டு வரும் நிலையில், அதில் பல்வேறு சிக்கல்கள் வந்து கொண்டிருக்கிறதாம். மாநாடு நடத்த இடம் கொடுக்க விடாமல் அரசியல் அழுத்தம் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கிறது.
கனிமொழியின் அட்வைஸ்:
இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அதில் அவரிடம் விஜய்க்கு என்ன அரசியல் அட்வைஸ் கொடுப்பீங்க என கேட்டிருந்தார்கள். அதற்கு அவர், நடிகர் விஜயை எனக்கு சின்ன வயதில் இருந்தே நன்றாக தெரியும். அவரது குடும்பத்துடனும் எனக்கு நல்ல பழக்கம் இருக்கிறது. நல்ல தெளிவு மற்றும் கடின உழைப்பு இருந்தால் தான் சினிமாவில் அவரால் இந்த இடத்திற்கு வர முடிந்தது.

அறிவிப்பு வெளியாகும் :
அதேபோல், தெளிவாகவும் கடின உழைப்போடும் அரசியலில் பயணிக்க வேண்டும் என அவருக்கு அட்வைஸ் கூறுவேன் என்று கனிமொழி கூறியிருக்கிறார். இவ்வாறு கனிமொழி கூறியவுடன் அரங்கமே அதிர்ந்தது. தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும், வருகின்ற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம் வெளியாகும் நிலையில், அதற்குப் பிறகுதான் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் கொடி குறித்தும், முதல் மாநாடு குறித்தும் தகவல்கள் வெளியாகும் என கூறுகிறார்கள்.






