2021ல் இருந்து நான் வாங்கும் MP சம்பளம் முழுவதையும் இதற்காக தான் பயன்படுத்தி இருக்கிறேன் – விஜய் வசந்த் வெளியிட்ட வீடியோ.

0
250
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர்களாக நுழைந்து பின்னர் அரசியல் வாதிகளாக பல பேர் மாறி இருக்கின்றனர். அந்த வகையில் நடிகரும் கன்னியாகுமரி தொகுதி எம் பிவுமான விஜய் வசந்தும் ஒருவர். இவருடைய அப்பா மிகப் பெரிய தொழிலதிபர். அது வேற யாரும் இல்லை. புகழ் பெற்ற வணிக நிறுவனமான வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமார். அது மட்டும் இல்லாமல் இவரின் தந்தை வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

இவரின் மகன் தான் நடிகர் விஜய் வசந்த். தற்போது நடிகர் விஜய் வசந்த் அவர்கள் வசந்த் & கோவின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். மேலும், நடிகர் விஜய் வசந்த் அவர்கள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் நண்பர் ஆவார். அதனால் இவர் இயக்கிய முதல் திரைப்படமான சென்னை 28 படத்தில் நடிகர் விஜய் வசந்த் நடித்தார். இதன் பின் மீண்டும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது.

- Advertisement -

விஜய் வசந்த் திரைப்பயணம்:

இந்த படத்திலும் நடிகர் விஜய் வசந்த் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் படத்தில் நடித்து இருந்தார். பின் தளபதி விஜய் நடித்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின் பல படங்களில் ஹீரோவாகவும் இவர் நடித்து உள்ளார். பின் சமீப காலமாகவே இவர் சினிமா பக்கம் காணோம். இதனால் பல பேர் பல விமர்சனங்களை எழுப்பினார்கள்.

விஜய் வசந்த் குடும்பம்:

பின் இவர் “மை டியர் லீசா” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் விஜய் வசந்த் கடந்த 2010 ஆம் ஆண்டு நித்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். இன்னொரு பக்கம், இவர் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதே போல கடந்த சில வருடங்களுக்கு முன் கன்னியாகுமாரி தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாகவும் பொறுப்பேற்றார்.

-விளம்பரம்-

விஜய் வசந்த் காங்கிரஸ் கட்சி:

இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருக்கிறார். மேலும், இவர் தன் அரசியல் பணியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

விஜய் வசந்த் வீடியோ:

மேலும், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தற்போது மும்முரமாக தேர்தல் பிரச்சார வேலைகள் நடைபெறுகிறது. அந்த வகையில் விஜய் வசந்த் எம் பி பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், கன்னியாகுமரி தொகுதியில் நிற்கிறேன். கடந்த முறை எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்ததற்கு ரொம்ப நன்றி. நான் இந்த எம்பி பதவி மூலம் வரும் பணத்தை முழுவதுமாகவே மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் சமூக சேவைகளுக்கும் கொடுத்திருக்கிறேன். அவர்களுக்கான கல்வி உதவி தொகை, விளையாட்டு பொருட்கள், அவசர உதவி என செய்து கொண்டு இருக்கிறேன். இனி இந்த பணியை நான் தொடர இந்த தேர்தலிலும் என்னை வெற்றி பெற செய்வீர்கள். மறக்காமல், மறந்தும் போகாமல் கைச்சின்னத்திற்கு வாக்களிப்பீர்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement