பிரம்மாண்டமாக தொடங்கியது Mr and Mrs சின்னத்திரை சீசன் 5, போட்டியாளர் இவர்கள்தானாம்- வெளியான வீடியோ இதோ

0
423
- Advertisement -

‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ்’ சின்னத்திரை சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த தகவல்தான் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் விஜய் டிவி வித்தியாசமான பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில் துவங்கப்பட்ட நிகழ்ச்சி தான் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’. இந்த நிலையில் பிரபலங்கள் கணவன் மனைவியாக நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடுவார்கள். பின் பல போட்டிகள், சவால்கள் என இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லும்.

- Advertisement -

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை :

இந்த நிகழ்ச்சியை மாகாபா மற்றும் நிஷா தொகுத்து வழங்குவார்கள். நடுவராக நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி இருப்பார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்து இருக்கிறது. கடந்த நான்காவது சீசனில் மகாலிங்கம் -ராஜேஸ்வரி ஜோடி டைட்டில் வின்னர் ஆனார்கள். இந்த டைட்டில் வின்னர் ஜோடிக்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டிருந்தது. பின்னணி பாடகர் ஆன மகாலிங்கம் மற்றும் அவர் மனைவி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீசன் 5:

இப்படி ரசிகர்களின் பேராதரவை பெற்ற மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 5 அண்மையில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாகாபா ஆனந்த் மற்றும் நிஷா தொகுத்து வழங்குகிறார்கள். அதேபோல், இந்த சீசனில் நீயா நானா கோபிநாத் மற்றும் ராதா நடுவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. மக்களின் பேராதரவை பெற்ற இந்த ஷோவின் போட்டியாளர்களின் ப்ரோமோ இப்போது வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

சீசன் 5 போட்டியாளர்கள்:

அதாவது இந்த நிகழ்ச்சி குறித்து இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளனர். அதில் முதல் ப்ரோமோவில் நடுவர்கள் விவரம் வெளியான நிலையில். அடுத்து முதல் ஐந்து போட்டியாளர்களின் விவரத்தோடு இரண்டாவது பிரம்மோவும் வெளியாகியுள்ளது. அதில் நாஞ்சில் விஜயன் – மரியா, இந்திரஜா -கார்த்திக், நவீன்- சௌமியா, ஆஷிக்- சோனு மற்றும் மீரா கிருஷ்ணா-சிவக்குமார் ஆகியோர் பங்கு பெற உள்ளனர்.

நிகழ்ச்சி விவரம்:

வெளியான இந்த ப்ரோமோவை கண்டு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், மீதி உள்ள போட்டியாளர்கள் யார் என மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 29 முதல் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.

Advertisement