இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகைகள் சிலர் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ம.கா.பா ஆனந்த் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். மொத்தம் 10 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து வழிநடத்தும் பொறுப்பு 'பிக் பாஸ்' ஷக்திக்கும், காயத்ரிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சில சின்னத்திரை நடிகைகளிடம் நிகழ்ச்சியின் அனுபவம் பற்றி கேட்டோம்.
ஶ்ரீவித்யா (கல்யாணப் பரிசு) :
“ ‘கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' நாடகத்துக்கு அப்புறம் விஜய் டி.வியில் எட்டு வருஷம் கழிச்சு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கேன். அதனால், ரொம்பவே ஹேப்பியா இந்த ஷோக்குள்ளே நுழைஞ்சேன். போட்டிப் போடும் பாதி பேர் என்னோடு ஏற்கெனவே நடிச்சிருக்காங்க. மீதி பேருடன் இனிமேதான் பழகணும். இந்த ஷோ முழுக்க முழுக்க திருமணமானவங்களுக்கான நிகழ்ச்சி. ஆனால், திருமணமானவங்களுக்கு தெரிஞ்சு இருக்கிற சமையல் எனக்குச் சுத்தமா தெரியாது. இந்த நிகழ்ச்சிக்காக, இப்போதான் சமைக்க ஆரம்பிச்சிருக்கேன். இந்த நிகழ்ச்சியில எங்களுக்கு வழிகாட்டியா பிக்பாஸ் ஷக்தியும், காயத்ரியும் வருவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை. நாங்க பத்து பேரும் ஒண்ணாதான் டிராவல் பண்ணப்போறோம்னு நினைச்சோம். திடீர்னு ஷக்தியும் காயத்ரியும் ரெண்டு குழுவா பிரிச்சதும் ரொம்பவே ஷாக்கிங்கா இருந்துச்சு. இந்த நிகழ்ச்சிக்காக வித்தியாசமா ஒரு திறமையை வெளிப்படுத்த திட்டம் போட்டிருக்கேன். அது என்னனு ஷோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க. ஹார்டு வொர்க் பண்ணி, டைட்டில் வின் பண்ணுவேன்.''




