சமீப காலமாகவே முன்னணி நடிகர், நடிகைகள் இடையே காதல், கல்யாணம் போன்ற கிசுகிசுக்கள் பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதில் சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், சில விஷயங்கள் வதந்திகள். அதை விளம்பரத்திற்காகவே செய்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தனுஷ்-மிருணாள் தாக்கூர் இடையே காதல் இருப்பதாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன் மிருணாள் படத்தினுடைய விழாவிற்காக சிறப்பு விருந்தினராக தனுஷ் வந்திருந்தார்.

உடனே இருவருக்கும் ஏதாவது கிசுகிசு இருக்கிறதா? என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். அதற்குப்பின் மிருணாள் பிறந்தநாள் விழாவிலேயுமே தனுஷ் கலந்திருந்தார். அதனை அடுத்து அடிக்கடி தனுஷ் அவர்கள் மிருணாள் உடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவ தொடங்கியது.
மிருணாள் தாக்கூர்-தனுஷ் கிசுகிசு:
பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மிருணாள் தாக்கூர், தனுஷ் எனக்கு நல்ல நண்பர். தேவையில்லாமல் எங்களைப் பற்றி தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது என்றார். இருந்தாலும், தனுஷ்-மிருணாள் பற்றிய வதந்திகள் சோசியல் மீடியாவில் ஓய்ந்தபாடில்லை. அதோடு கடந்த சில நாட்களாகவே தனுஷ்- மிருணாள் தாகூர் இருவருக்கும் வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மிருணாள் தாக்கூர் பேட்டி:
தற்போது இது மிகப்பெரிய அளவில் விவாத பொருளாகவே மாறி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மிருணாள் தாக்கூர், யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியை கிளப்பினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், பிப்ரவரி 14-ஆம் தேதி அவர்களுக்கு முட்டாள்கள் தினமான ஏப்ரல் ஒன்றாம் தேதியாக மாறப் போகிறது.
View this post on Instagram
சர்ச்சைகளுக்கு பதிலடி:
அவர்களாகவே எதையாவது ஒன்னு சோசியல் மீடியாவில் பதிவிட்டு மிருணாள் தான் இதை சொன்னார் என்று சொல்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில் சரியான நபரை சந்திக்கும் போது திருமணம் செய்து கொள்ளலாம். தேவையில்லாமல் இந்த மாதிரி வதந்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.






