‘அடுத்த யாஷிகா நிலம தான்’ – தன் பிறந்தநாள் போஸ்டில் கமன்ட் செய்தவருக்கு எம் எஸ் பாஸ்கர் மகள் பதிலடி.

0
1858
ishwarya
- Advertisement -

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான யாஷிகா கடந்த சில வாரங்களுக்கு முன் கொடூர விபத்தில் சிக்கி படு காயம் அடைந்தார். இந்த விபத்தில் யாஷிகாவுடன் சென்ற அவரது தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் யாஷிகாவிற்கு முதுகு மற்றும் கால் போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

யாஷிகாவின் விபத்தின் அதிவேகமாக கார் ஓட்டியதால் தான் நேர்ந்தது என்று கூறப்பட்டது. மேலும், யாஷிகா குடித்துவிட்டு தான் கார் ஓட்டினார் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் சிலர் கூறினர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கார் ஓட்டும் வீடியோவை பகிர்ந்த எம் எஸ் பாஸ்கரின் மகளை அடுத்த யாஷிகா நீ தான் என்று கூறியதால் அவர் கடுப்பாகி இருக்கிறார்.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய இரண்டாம் மனைவி – திருமண வீடியோவை வெளியிட்ட விஷ்ணு விஷால்

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர்.நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர். ஆதித்யா நடிகராக திகழ்ந்து வரும் நிலையில் எம் எஸ் பாஸ்கரின் மகள் டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இவருக்கு திருமணம் கூட நடைபெற்றது. அதே போல சமீபத்தில், இவர் தனது 27 வது பிறந்தநாளை கொண்டாடிய போது , ஒரு மலைப்பகுதியில் கார் ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதற்கு இன்ஸ்டாவாசி ஒருவர் ‘அடுத்த யாஷிகா நிலைமை போல தான்’ என்று கமன்ட் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா பாஸ்கர், நான் பொதுவாக நெகடிவ் கமெண்டுகளுக்கு ரிப்ளை செய்வதில்லை. உங்கள் இதயத்தில் வெறுப்பு மற்றும் உங்கள் எண்ணங்களில் எதிர்மறையே உள்ளது. உங்களைப் போன்ற ஒருவரின் வாழ்வில் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் இருப்பதற்காக நான் பரிதாபப்படுகிறேன். நீங்கள் நேர்மறையான வாழ்க்கையை தொடர உதவி பெறுவீர்கள் என்று நம்புகிறேன் என்று காட்டமாக பதில் கூறியுள்ளார்.

Advertisement