தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் இருந்து வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் டப்பிங் கலைஞரும் ஆவார். இவரது வாழ்க்கை ஒரு நாடக கலைஞர் ஆக தொடங்கியது. பின், 1978ல் ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1990 களில் பல சிறிய படங்களில் நடித்தார். பின் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படம் தான் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

இவர் நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகர் ஆகவும் இருக்கிறார். இவர் சின்னத்திரையிலும் சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி, அரசி போன்ற தொடர்களில் நடித்து இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதிலும் இவர் நடித்திருந்த பார்க்கிங் படத்தில் இவருடைய நடிப்பு பயங்கர வில்லத் தனமாக இருந்தது.
எம் எஸ் பாஸ்கர் குறித்த தகவல்:
இந்த படத்திற்காக எம் எஸ் பாஸ்கருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதை அடுத்தும் இவர் படங்களில் பிசியாக பயணித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் நுழைந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார். சமீபத்தில் தனுஷின் நடிப்பில் வெளியாகியிருந்த கர படத்தில் ஒரு வயதான முதியவர் ரோலில் எம் எஸ் பாஸ்கர் நடித்திருந்தார்.

எம் எஸ் பாஸ்கர் பேட்டி:
அந்த கதாபாத்திரத்தை பார்த்து எம் எஸ் பாஸ்கரா? என்று யூகிக்க முடியாத அளவிற்கு அவருடைய தோற்றம் இருந்தது. அதோடு கர படத்தில் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டியும் இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் எம் எஸ் பாஸ்கர், என்னைப் பொறுத்தவரை இயக்குனர் சொல்வதை தான் செய்கிறேன்.

கதாபாத்திரம் பற்றி சொன்னது:
நல்ல கதைக்காக எதையும் செய்யலாம். அப்படித்தான் கர படத்தில் வயதான முதியவர் தோற்றத்தில் நடித்தேன். என்னுடைய குரலையும் அந்த படத்திற்காக மாற்றிக்கொண்டேன். நான் யார் என்று ரசிகர்கள் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அந்த கதாபாத்திரத்தை ரசித்தாலே போதும். அதிலேயே நான் சந்தோஷப்படுவேன். அப்படித்தான் நான் சினிமாவில் பயணித்து வருகிறேன் என்று கூறி இருக்கிறார்.






