இயக்குனர் எஸ்.என் சக்திவேல் பற்றி நடிகர் எம்.எஸ். பாஸ்கர் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வசனங்கள் மூலம் சினிமா துறையில் நுழைந்து மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் எஸ்.என் சக்திவேல். இவர் வடசென்னையை பூர்விகமாகக் கொண்டவர். கோல்மால் போன்ற சில படங்களில் இவர் வசனங்கள் எழுதி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தண்ணீயில் கண்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் தீபக், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ் பாஸ்கர் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

இந்த படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதனை அடுத்து 2018 ஆம் ஆண்டில் இவர் 'காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்ற படத்தை இயக்கியிருந்தார். இவர் மட்டும் இல்லாமல் இன்னொரு இயக்குனருடன் சேர்ந்து தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். இருந்தாலுமே இவரின் படங்கள் பெரிதாக வரவேற்கப்படவில்லை. ஆனால், சின்னத்திரையில் இவர் இயக்கிய சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.
சக்திவேல் குறித்த தகவல்:
அந்த வகையில் இவர் இயக்கிய சீரியல்களில் ஒன்று சின்ன பாப்பா பெரிய பாப்பா. இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இதனால இந்த சீரியல் இரண்டு சீசன் ஒளிபரப்பானது. அதற்குப் பிறகு இவர் ராடான், விகடன் போன்ற நிறுவனங்களுக்கு சில சீரியல்களை இயக்கி தந்து இருந்தார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி சீரியல்களிலும் இயக்கி இருந்தார். கடைசியாக இவர் விகடன் தயாரித்த பட்ஜெட் குடும்பம் என்ற தொடரை இயக்கியிருந்தார்.

சக்திவேல் இறப்பு:
சில மாதங்களுக்கு முன்புதான் அந்த தொடர் முடிவடைந்தது. அதற்கு பின் அடுத்த பிராஜெக்ட்க்கு சக்திவேல் தயாராகி இருந்தார். இன்னொரு பக்கம் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் நடித்து வந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில மாதங்களாகவே இவர் சிறுநீரக பிரச்சனையால் அவஸ்தை பட்டு இருந்தார். அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார் இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை எடுத்திருந்தார். சிகிச்சை முடிந்து சில தினங்களுக்கு முன்பு தான் இவர் வீடு திரும்பினார். இருந்தாலுமே இவர் உடல்நிலை மோசமாகி இன்று காலை உயிரிழந்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=o6XYVi7yLrw
எம் எஸ் பாஸ்கர் பேட்டி:
இவருடைய இழப்பு சினிமா, சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திருக்கிறது. பிரபலங்கள் பலருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இவருடன் பணியாற்றிய நடிகர் எம் எஸ் பாஸ்கர், சக்திவேல் என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய நண்பன், நலம் விரும்பி. பட்டாபி கதாபாத்திரம் மூலம் தான் நான் மக்களிடையே பிரபலமானேன். இந்த அளவு நான் வளர்ச்சி அடைந்திருக்கிறேன் என்றால் அதற்கு சக்திவேல் சார் முக்கிய காரணம். நல்ல மனிதர். அவர் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருந்தது. அந்த போராட்டத்திலே இறைவனிடமும் சென்று விட்டார் என்று வேதனையுடன் பேசியிருக்கிறார்.






