பிக் பாஸ் நாயகன், 90ஸின் எவர் கிரீன் நாயகி, சூப்பர் காமெடியின் – தோனி தயாரிக்கும் முதல் படத்தின் பூஜை விவரம் இதோ.

0
505
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இவர் வட மாநிலத்தவராக இருந்தாலும் தமிழ்நாடு மக்கள் செல்லமாக “தல டோனி” என்று அழைத்து வருவதற்கு காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல காலமாக கேப்டனாக இருந்து கோப்பைகளை சென்னை அணிக்கு வாங்கிக்கொடுத்து தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்ததுதான்.

-விளம்பரம்-

ரயில்வே ஸ்டேஷனில் சாதாரண டிக்கெட் க்லெக்டராக இருந்த டோனி தன்னுடைய கடுமையான முயற்சியினால் இன்று உலகமே திரும்பி பார்க்கும் ஒரு சிறந்த கிரெக்ட் வீரராக பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு உலகக்கோப்பை வாங்கி கொடுத்தது டோனி மற்றும் அவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியையே சாரும்

- Advertisement -

தயாரிப்பாளராக டோனி :

இப்படி கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருந்த டோனி தற்போது சினிமா துறையிலும் கலக்க வந்துவிட்டார். இந்நிலையில் தோணி என்டேர்டைமென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரிக்க இருக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் இவர் எடுக்கும் முதல் படமே தமிழ் படமாக அமைந்துள்ளது. தற்போது தல டோனி தயாரிக்கும் முதல் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த போஜயில் தோனியின் மனைவி சாக்ஷி அகர்வால் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

டோனி என்டர்டைமென்ட் :

சமீபத்தில் டோனி என்டர்டைமென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி “தி ரோர் ஆஃப் தி லயன்” என்ற ஆவணப்படத்தை தயாரித்திருந்தது. மேலும் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து “வுமன் ஸ் டே அவுட்” என்ற குறும்படத்தை இயக்கியது மூலம் தனக்கென ஒரு பெயரை சினிமாத்துறையில் பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தான் தமிழ் மொழியில் நேரடியாக திரைப்படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து தற்போது படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது.

-விளம்பரம்-

முதல் தமிழ் படம் :

டோனி என்டர்டைமென்ட் தயாரிப்பில் வரும் முதல் தமிழ் படத்தின் கதாநாயகியாக “லவ் டுடே” படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை இவானாவும், கதாநாயகனாக பிக் பாஸ் ஹரிஷ் கல்யானும் நடிக்கின்றனர். அதோடு யோகிபாபு, நதியா போன்றவர்களுக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு “லெட்ஸ் கேட் மேரீட்” என்ற பெயரை வைத்திருக்கிறது படக்குழு. இந்த நிலையில் தான் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்ததும், இதில் டோனியின் மனைவி சாக்ஷி அகர்வால் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்று படத்தை தொடங்கி வைத்தார்.

Advertisement