நியூஸிலாந்து அணிக்கு எதிரான T20 அணி பட்டியலில் தோனி..!

0
671
Dhoni
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் வருகிறது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது.

-விளம்பரம்-

இந்த தொடரை அடுத்து வரும் ஜனவரி மாதம்
3 ஆம் தேதி முதல் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் தொடங்க உள்ளது. இந்தநிலையில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியலினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்க : இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் ஆட்டத்தில் 7 வயதே ஆன சிறுவன் தேர்வு..!

- Advertisement -

இந்த வீரர்கள் பட்டியலில் முன்னால் கேப்டன் எம்.எஸ். தோனியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. 2019 உலகக் கோப்பை தொடரைக் கருத்தில் கொண்டு, எம்.எஸ். தோனி சேர்க்கப்பட்டு உள்ளார். உலக கோப்பைக்கு முன்னால் தோனி 8 ஒருநாள் போட்டியிலும், மூன்று டி-20 போட்டியிலும் என அடுத்த ஒரு மாதத்தில் மொத்தம் 11 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் தோனி இல்லாமல் இருந்ததால் வருத்தத்தில் இருந்து வந்தனர் ரசிகர்கள் .ஆனால், தற்போது மீண்டும் அணியில் எம்.எஸ். தோனியின் பெயர் இடம் பெற்றுள்ளதால், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ அமைப்புக்கு நன்றி கூறியும், எம்.எஸ். தோனிக்கு வாழ்த்து தெரிவித்தும் கொண்டாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement