ஆபீஸ் பாய் முதல் சர்வர் வேலை வரை – தமிழ் சினிமாவின் பொற்காலத்தின் அரசன் எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆச்சரிய பக்கங்கள்.

0
80
viswanathan
- Advertisement -

இந்திய அளவில் மிகப்பிரபலமான பாடகராகவும், நடிகராகவும் புகழ் பெற்று விளங்கியவர் எம் எஸ் விஸ்வநாதன். இவர் 1953 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் 1,700 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். இவருடைய பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், இவர் ஜானகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

விஸ்வநாதன்- ஜானகி தம்பதிக்கு 4 மகன்களும், 3 மகள்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருமே இசைத்துறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று மெல்லிசை மன்னரின் பிறந்தநாள். ஆகவே, இவரைப் பற்றி பல சுவாரசியமான விஷயங்களைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இளையராஜா, ஏ ஆர் ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன்-ஷங்கர்-ராஜா, ஜிவி பிரகாஷ் என பெரும்பாலான முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் இவர் பாடியிருக்கிறார்.

- Advertisement -

எம்.எஸ்.வியின் குரு:

இப்படித் தலைமுறைகள் தாண்டியும் இவரின் குரல் சாதனை படைத்து இருக்கிறது. இவர் தன்னுடைய குரு, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவை கடைசி வரை போற்றிப் பாதுகாத்து இருந்தவர். மேலும், அவர் மறைவுக்குப் பிறகு அவரது மனைவியைத் தாய்போல் கருதி அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமையைக் கூடச் செய்த மாமனிதன். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சினிமா கம்பெனிகளில் ஆபிஸ் பாயாக, சர்வராக, வேலை பார்த்திருக்கிறார்.

எம்.எஸ்.வியின் சாதனை:

அந்த அனுபவங்களை எல்லாம் நகைச்சுவையோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தும் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் மெல்லிசை அரசனுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. கலைமாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் என வாங்கி இருக்கிறார். ஆனால், அவருக்குத் தேசிய விருதே கிடைத்ததில்லை. இது அதிர்ச்சிகரமான தகவல். இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்த இவர் 1998 முதல் 2013 வரை படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

எம்.எஸ்.வியின் இசை பயணம்:

மேலும், இவர் 30 வருடங்கள் இசையில் ராஜ்ஜியம் செய்து இருக்கிறார். அதோடு இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி பல மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். அதிலும் எம்.எஸ்.வி. தன்னுடைய சொந்த குரலில் உச்சஸ்தாயில் பாடுவது அவரது ஸ்பெஷல். அப்போது எல்லாம் ஒரு பாடலாவது அவரின் பாட்டுக் கச்சேரியில் கட்டாயம் இடம்பெறும். இவர் விளையாட்டுக்குக் கூட பள்ளிக்கூடம் செல்லாத இசை மாமேதை.

எம்.எஸ்.வியின் பிறந்தநாள்:

ஆனால், அத்தனை பேரும் பயிலக்கூடிய ஈடு இணையற்ற இசைப்பள்ளியாகத் திகழ்ந்தவர். மேலும், இவர் வார்த்தைக்கு வார்த்தை, மூச்சுக்கு மூச்சு சொல்வது ‘முருகா முருகா’ என்று தான். தமிழ்த்தாய் வாழ்த்து ‘நீராரும் கடலுடுத்த’ பாடலுக்கு இசை அமைப்பு செய்த பெருமை இவருக்கு உண்டு. எம்.எஸ்.வி மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்து இருந்தது. இன்று உன்னத இசை கலைஞரின் பிறந்த நாள்.

Advertisement