தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிக் பாஸ் முகென். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான் ஜின்- தி பெட். இந்த படத்தை டி.ஆர்.பாலா என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு விவேக்- மெர்வின் இசை அமைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் முகென் உடன் பவ்யா திரிகா, பாலசரவணன், இமான் அண்ணாச்சி, ராதாரவி, நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஜின்னை சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடைய உடலில் இருந்து மந்திரங்கள் செய்து பிரித்தெடுத்து ஒரு பாக்ஸில் அடைத்து இருக்கிறார்கள். அதற்குப்பின் தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு கதை வருகிறது. முகென் மலேசியாவில் ஒரு மியூசிக் பேண்ட் வைத்து நடத்தி வருகிறார். அங்கு அவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால், அது தோல்வியில்தான் முடிகிறது. அதனால் மன வேதனையில் முகென் தமிழ்நாடு வருகிறார்.
அப்போது ஒரு ஜின் அடைந்திருக்கும் பெட்டியை பார்க்கிறார். அந்த பெட்டியில் கை வைத்ததுமே அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வருகிறது. லக்கி என நினைத்து அந்த ஜின்னை தன்னுடைய வீட்டிலேயே வளர்க்க முடிவெடுக்கிறார் முகெ.ன் ஆனால், இந்த ஜின், முகென் தவிர அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் கஷ்டத்தை கொடுக்கிறது. அந்த ஜின்னை ஒரு கட்டத்தில் முகென் வெளியே தூக்கி எறிகிறார். இதனால் அந்த ஜின் முழு உருவம் எடுக்கிறது.

அதற்கு பின் என்ன ஆனது? முகென் வாழ்க்கையில் பிரச்சனை வந்ததா? அவர் குடும்பத்தின் நிலை என்ன? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. ஜின் என்பது ஒரு குட்டிச்சாத்தான். ஒரு குட்டிச்சாத்தனுடைய கான்செப்ட் தான் இந்த படம். மனிதர்களை பாதுகாக்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜின்கள் படைக்கப்பட்டது. நல்ல ஜின்கள் தன்னுடைய எஜமான் இடம் விசுவாசமாக இருந்து உயிரையும் கொடுக்கும். நாளடைவில் விரோதிகள் கெட்ட ஜின்களை படைக்கிறார்கள். அவை ஆக்ரோஷமாக கொடூரத்தனமாக
உயிரிகளை எடுக்கவும் செய்கிறது.
அந்த வகையில் இந்த படத்தில் கெட்ட ஜின்னால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாகக் கொண்டு இயக்குனர் எடுத்து இருக்கிறார். படத்தின் ஹீரோ முகென் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். படம் முழுவதுமே தன் தோளில் சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். சந்தோசம், சோகம், பயம் என அனைத்து காட்சிகளிலுமே முகென் ஸ்கோர் செய்து இருக்கிறார். முகென், ஜின்னுடன் சேர்ந்து செய்யும் லூட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது.

இவரை அடுத்து படத்தில் வரும் பால சரவணன் காமெடி பார்வையாளர்களை சிரிக்க வைத்திருக்கிறது. ஒரு வித்தியாசமான கான்செப்ட்டை இயக்குனர் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். முதல் பாதி பொறுமையாக சென்றாலும் இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ் சூப்பர். குழந்தைகளை கவரும் வகையில் இயக்குனர் கொடுத்து இருக்கிறார். படத்தினுடைய பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் இந்த கோடை விடுமுறையில் குழந்தைகள் கொண்டாடும் வகையில் ஜின் படம் அமைந்திருக்கிறது.
https://youtu.be/Gik91mHDfZI?si=0_BopYKI1XdmDW3a
நிறை:
நடிகர்கள் நடிப்பு
கான்செப்ட் அருமை
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்திலும் இயக்குனர் திறம்பட செயல்பட்டு இருக்கிறார்
பால சரவணன் காமெடி சூப்பர்
இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

குறை:
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
பாடல்கள் பெரிதாக கவரவில்லை
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் ஜின் தி பெட் - குழந்தைகளை கவரும்






