தாயை குளியல் அறையில் தள்ளி கொலை செய்த நடிகர்..! பதறவைத்த சம்பவம்

0
206
Sunita-Singh

சமீப காலமாக பிரபலங்களின் உயிரிழப்பு சம்பங்கள் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறி வருகிறது. அந்த வகையில் போதையில் பெற்ற தாயையே நடிகை ஒருவர் குளியறையில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Sunitha

மும்பை, லோகந்த்வாலா பகுதியை சேர்ந்த லக்சயா சிங் என்ற மாடல் அழகியும் நடிகையுமான இளம் பெண் கடந்த புதன் கிழமை இரவு தனது அம்மா சுனிதா மற்றும் தனது தோழி ஐஸ்ப்ரியா என்பவருடன் போதை பொருளை வீட்டிலேயே உட்குண்டுள்ளனர். அப்போது அவர்களது வீட்டில் இரண்டு பணியாளர்களும் இருந்துள்ளனர்.

மூவருக்கும் போதை அதிகமாகிவிட தாய் சுனிதா தனது மகள் லக்சயா சிங்கிடம் அவரது காதலர் குறித்தும் லக்சயா சிங் செலவு செய்வதை குறித்தும் கூறி சண்டை போட்டுள்ளார். தாய் சுனிதாவிற்கு போதை அதிகமாகிவிட லக்சயா சிங்கிடம் ஏதேதோ உளறிக்கொண்டு சண்டை போட்டுள்ளார். இதனால் லக்சயா சிங்கின் தோழி ஐஸ்ப்ரியாவும் சமாதானம் செய்து;ள்ளார்.

sunita_singh

sunitha-designer

இருவர் பேச்சையும் கேட்காததால் ஆத்திரம் அடைந்த லக்சயா சிங் தனது தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அவரை குளியலறைக்கு கூட்டி சென்று சண்டை போட்டுள்ளார். ஒருகட்டத்தில் சுனிதாவை, லக்சயா சிங் வேகமாக தள்ளிவிட அவர் பாத் ரூமில் இருந்த சிங்க் தொட்டி ஒன்றில் மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

போதையில் இருந்த லக்சயா தனது தாய் உயிரிழந்து விட்டார் என்று தெரியாமல் குளியலறையை தாப்பாள் போட்டு சென்றிருக்கிறார். பின்னர் காலையில் வந்து பார்த்ததும் குளியலறையில் ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் தனது தாயை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் நடிகை லக்சயா சிங். தகவலிருந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் நாடாகி லக்சயா சிங்கை கைது செய்தது. இந்த சம்பவம் மும்பை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.