கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும்..! பிரபல நடிகரின் கோரிக்கைக்கு போலீஸ் பதிலடி.!

0
458
janja

பாலிவுட் பொறுத்தவரை சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருந்தது இல்லை அந்த வகையில் இந்தி நடிகர் உதய் சோப்ரா இந்தியாவில் கஞ்சாவை சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தது இந்தி திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

GANJA

- Advertisement -

இந்தி நடிகரான உதய் சோப்ரா பல இந்தி படங்களில் கதாநாயகனாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.பாலிவுட்டில் வெளியான “தூம்” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிட்சியமானார். சமீபத்தில் கஞ்சா குறித்து சர்ச்சையான டீவீட் செய்த உதய் சோப்ரா , இந்திவாயில் கஞ்சாவை சட்டபூர்வமாக ஆக்க வேண்டும். அது நமது கலாச்சாரத்துடன் தொடர்புடையது.

கஞ்சாவை சட்டபூர்வமாக ஆக்கினால் அதன் மூலமாக வரும் வரி நாட்டிற்கு ஒரு நல்ல வருவாயாக அமையும். அத்தோடு கஞ்சாவை அரசே விற்பனை செய்தால் சட்ட விரோதமான செயல்களும் தடுக்கப்படும். கஞ்சாவில் அதிகப்படியான மருத்துவ குணமும் இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

uday_chopra

நடிகர் உதய் சோப்ராவின் இந்த சர்ச்சையான பதிவிற்கு பதிலளித்த டெல்லி காவல் துறையினர், கஞ்சாவை வைத்திருப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறோம் .போதை பொருள் தடுப்பு சட்டம் 1985 -ன் படி குற்றம் என்று எச்சரித்துள்ளனர்.

Advertisement