பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வர நாமினேஷனில் இடம்பெற்றிருந்த மும்தாஜ், ஐஸ்வர்யா,ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் மும்தாஜ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. மும்தாஜின் வெளியேற்றத்தை குறித்து பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மும்தாஜ் அடாவடி குணத்தால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக அனைவரின் அபிமானத்தையும் பெற்றிருந்தார். அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை மும்தாஜ் பலரிடம் கடுமையாக நடந்து கொண்டாலும் ஷாரரிக்கிடம் மட்டும் மிகவும் அன்பாகவே நடந்துகொண்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை மும்தாஜ், ஷாரிக்கை ஒரு மகன் போலவே பாவித்து வந்தார் ஆனால். ஷாரிக் வெளியேறிய சில நாட்களுக்கு முன்பாக மும்தாஜிற்கும், ஷாரிக்கிற்கும் லேசாக முட்டிக்கொண்டு கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டது.இருப்பினும் ஷாரிக் வெளியேறிய போது கண்ணீர்விட்டு அழுதார் மும்தாஜ்.
மும்தாஜ், பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பின்னர் மும்தாஜை முதல் ஆளாக கலா மாஸ்டர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை கூறினார்.இந்நிலையில் மும்தாஜை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ஷாரிக் தனது இன்ஸ்டாகிராம் பி[பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு “my momo ” என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.