காளை படத்தில் ஒரு ஓரமாக நடித்துள்ள இந்த பிரபல நடிகர் யார்னு தெரியுதா ?

0
18460

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகர் நடிகைகள் ஆரம்பகாலத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்கள்தான். விஜய் சேதுபதி, கார்த்தி, திரிஷா போன்ற பல்வேறு முன்னணி நடிகர் நடிகைகள் கூட ஆரம்ப காலத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்களில் ஒரு ஓரமாக சிறு காட்சிகளில் நடித்தவர்கள் தான். அந்த வகையில் சிம்பு நடிப்பில் வெளியான காளை படத்தில் நடித்துள்ள எந்த நடிகரும் பிரபலமான ஒரு நடிகர்தான் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.

நடிகரும் இயக்குனருமான தருண்கோபி இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான காளை திரைப்படம் சிம்புவின் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து இருந்தது. இந்த படத்தில் வேதிகா சங்கீதா சந்தானம் என்று ரசிகர்களுக்கு பரிட்சயமான பல நடிகர்கள் நடித்து இருப்பார்கள். அவ்வளவு ஏன் இந்த படத்தில் சிம்புவின் நெருங்கிய நண்பரான நடிகர் மஹத் கூட சிம்புவின் நண்பராக இந்த படத்தில் நடித்திருப்பார். அதேபோல இந்த படத்தில் டீக்கடை சண்டைக்காட்சி ஒன்றில் தோன்றியிருக்கும் இந்த நடிகர் வேறுயாருமில்லை பிரபல நடிகரான முனிஸ்காந்த் தான்

- Advertisement -

இவரது உண்மையான பெயர் ராம் தாஸ் 1978 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்த இவர் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான முண்டாசுபட்டி படத்தின் மூலம் பிரபலமானார் இந்த படத்தில் இவர் முனிஸ்காந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ஆனால் அதுவே இவரது பட்டப் பெயராக மாறிவிட்டது முண்டாசுப்பட்டி படத்திற்கு பின்னர் இவர் பல படங்களில் நடித்து இருப்பார் என்பது பலரும் அறிந்த ஒன்று அவ்வளவு ஏன் கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை படத்தில் கூட இவர் நடித்திருந்தார்.

ஆனால் இவர் முண்டாசுப்பட்டி திரை படத்திற்கு முன்பாகவே எண்ணற்ற படங்களில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதன் முறையாக தமிழில் அறிமுகமான 2003 ஆம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளியான காதல் கிறுக்கன் படத்தின் மூலமாகத்தான். அதன் பின்னர் காளை, அறை என் 305-ல் கடவுள், ஆறுபடை, ஈசா, தம்பிக்கோட்டை என்று பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ முண்டாசுபட்டி திரைப்படம் தான்.

-விளம்பரம்-
Advertisement