ஜாதி மதம்னு சொல்லி வீட்ல பிரச்சனை பண்ணாங்க – ராஜ்கிரண் மகளை திருமணம் முடித்த சீரியல் நடிகர். வைரலாகும் புகைப்படம்.

0
626
Rajkiran
- Advertisement -

நடிகர் ராஜ்கிரணின் மகளை சின்னத்திரை சீரியல் நடிகர் முனீஸ்ராஜா திருமணம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் முனீஸ்ராஜா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் சம்பந்தம் என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார். இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், நடிகர் சண்முகராஜனுடன் பிறந்த தம்பி தான் முனீஸ்ராஜா. நாதஸ்வரம் சீரியலில் இவருடைய பேச்சும், ஸ்டைலும் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதனை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், பெரிய அளவில் இவருக்கு சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

முனீஸ்ராஜா குறித்த தகவல்:

இதை அடுத்து கடந்த சட்டசபை தேர்தலில் பழனி தொகுதியில் சுயேச்சை உறுப்பினராக போட்டியிட்டு முனீஸ்ராஜா தோல்வி அடைந்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரண் மகளுக்கும் முனீஸ்ராஜாவுக்கும் திருமணம் நடந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவுக்கும் முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இரண்டு பேருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.

முனீஸ்ராஜா- ஜீனத் திருமணம்:

இருந்தாலும், இவர்கள் காதலித்துக் கொண்டு தான் வந்தார்கள். பின் இவர்கள் பெற்றோர்களை மீறி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டார்கள். முனீஸ்ராஜா வீட்டில் இவர்களுடைய திருமணத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர். அதே நேரம் ராஜ்கிரன் வீட்டிலும் ராஜ்கிரன் தன் மகளின் முடிவுக்கு சம்மதம் சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால், ராஜ்கிரனின் மனைவி மட்டும் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லையாம்.

-விளம்பரம்-

முனீஸ்ராஜா அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து முனீஸ்ராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியிருந்தது, எனக்கும் ஜீனத்துக்கும் திருமணம் ஆனது உண்மை தான். பேஸ்புக் மூலமாகத் தான் முதன் முதலாக அவர்களை நான் பார்த்தேன். பார்த்ததும் பிடித்து போய்விட்டது. அப்படியே இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அடுத்த கட்டத்துக்கு செல்லும்போது தான் இரு வீட்டிலும் பிரச்சனை கிளம்பியது. ஜாதி, மதம் என்ற பல விஷயங்கள் எங்களுடைய வாழ்க்கையில் சிக்கலாக இருந்தது.

திருமணம் குறித்து முனீஸ்ராஜா சொன்னது:

இதை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று கூட தெரியவில்லை. ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது யார் மனதும் புண்படாமல் செய்வது என்பது தான் என்னுடைய விருப்பம். அதனால் அதற்காக முயற்சி செய்தோம். எப்படியாவது வரும் நாட்களில் இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து நல்ல ஒரு செய்தியை உங்களுக்கு சொல்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement