சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் தவறவிட்ட படத்தில் மற்றவர் நடித்து மாபெரும் அடைந்திருக்கிறது. அந்த வகையில் விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது வேறு யாரும் கிடையாது 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த முரளி தான். எழில் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, டவுசர் பாண்டி என்று என்று பல்வேறு நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
இந்த படம் அந்த ஆண்டில் வெளியான மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ஆர்பி சவுத்ரி தயாரிப்பில் வெளியாகி இருந்த இந்த படத்திற்கு இயக்குனர் எழில் முதலில் ருக்மணிக்காக என்று பெயரை வைத்திருந்தார். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி சிபாரிசில் இந்த படத்திற்கு துள்ளாத மனமும் துள்ளும் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முரளியை தான் ஆர்பி சவுத்ரி சிபாரிசு செய்திருந்தார். ஆனால், சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது பின்னர் இந்த படத்தின் கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறார்கள்.
இதையும் பாருங்க : 40 வயதை கடந்தாலும் கிளாமர் குறையாமல் இருக்கும் பூமிகா. அவரின் போஸ்களை நீங்களே பாருங்க.
இந்த படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போய்விட விஜய் இந்த படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளை மட்டும் வைக்க கேட்டிருக்கிறார். அதன் பின்னர் இந்த படத்தின்பணிகள் துவங்கியிருக்கிறது. அதேபோல இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். ஆனால், அதற்கு முன்பாகவே சிம்ரனுக்கு பதிலாக ரம்பா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், ரம்பாவும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக பின்னர் சிம்ரன் இந்த படத்தில் கமிட்டாகி இருந்தார். சொல்லப்போனால் இந்த படம் ருக்மணிக்காக என்ற பெயரில் முரளி மற்றும் ரம்பா நடிக்க வெளியாக வேண்டியது ஆனால் இது எதுவும் நடக்கவில்லை.
துள்ளாத மனமும் துள்ளும் வெளியான அதே ஆண்டில் முரளி நடிப்பில் பூவாசம், கனவே கலையாதே, ஊட்டி, இரணியன் போன்ற நான்கு படங்கள் அந்த ஆண்டில் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த நான்கு படங்களும் முரளிக்கு அவ்வளவாக கைகொடுக்கவில்லை. ஒருவேளை துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடித்திருந்தால் அவருக்கு இந்த படம் மீண்டும் ஒரு இதயம் போன்ற படமாக இருந்திருக்கும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை.மேலும் இந்த படம் முரளிக்கு மாபெரும் திருப்பு முனை படமாகவும் அமைந்திருக்கும்.