மீண்டும் முருகதாஸ் வீட்டின் கதவை தட்டவிருக்கும் போலீஸ் ..!முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவு..!

0
490
Murugadoss
- Advertisement -

சமீபத்தில் சர்கார் படத்தின் கதை தன்னுடையதுஎன்று வருண் ராஜேந்திரன் தெரிவித்து இருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் சென்றார். வழக்கில் வெற்றியும் பெற்றார். கதை ஏ.ஆர். முருகதாஸ் உடையது அல்ல என்பது உறுதியானது.

-விளம்பரம்-

குடும்பத்துடன் உண்ணா விரதம் இருந்த அன்பு ராஜசேகர்:

- Advertisement -

Anburajasekar

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘கத்தி’ படம் வெளியான போதும் ரங்கதாஸ் என்பவரும் அவரை அடுத்து கோபி நாயர் என்பவரும் கத்தி படத்தின் கதை தங்களுடையது என்று உரிமைகொண்டாடினார். இருப்பினும் படம் எந்த ஒரு சலனமும் இல்லாமல் வெளியாகியது.

-விளம்பரம்-

இதைதொர்ந்து குறும்பட இயக்குனர் அன்பு ராஜசேகர் ‘கத்தி ‘ திரைப்படத்தின் கதை தன்னுடைய கதை என்றும் தாகபூமி என்ற குறும்படத்தை தான் எடுத்ததாகவும் தாகபூமி குறும்படத்தை திருடி எனது அனுமதியில்லாமல் கத்தி திரைப்படமாக இயக்குநர் முருகதாஸ் எடுத்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.மேலும், இது தொடர்பாக கடந்த நவம்பர் 22 ஆம் அன்பு ராஜசேகர்,முருகதாஸ் மீது கதை திருட்டு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை விசாரித்த முதல்வர் பிரிவு அலுவலர் சார்பாக, தி நகர் காவல் கண்காணிப்பு அலுவலருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. இதையடுத்து காப்புரிமை சட்டத்தை சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.இதனால் முருகதாஸ் மீது எப்போது வேணுமானாலும் நடவடிக்கை எடுக்கபடலாம் என்றும் போலீஸ் எப்போது வேணுமானாலும் முருகதாஸ் வீட்டின் கதவை தட்டலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement