மலையாள நடிகர் ஒருவர் கையில் இருந்து இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன் விருது வாங்க மறுத்திருக்கும் சர்ச்சை தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாளத்தில் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் புகழ்பெற்று இருப்பவர் எம்.டி.வாசுதேவன் நாயர். இவர் இசையில் பல பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இவர் திரை துறையில் ஆற்றிய பங்கை கொண்டாடும் விதமாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் ’மனோரதங்கள்’ என்ற ஆந்தாலஜி திரைப்பட தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆந்தாலஜியில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன் லால், மம்மூட்டி, ஃபஹத் பாசில், பார்வதி திருவொத்து, நதியா, ஹரீஷ் உத்தமன், பிஜூ மேனன், ஆசிஃப் அலி, இந்திரன்ஸ், நெடுமுடி வேணு, சித்திக், அபர்ணா பாலமுரளி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஜி5 ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
’மனோரதங்கள்’ என்ற ஆந்தாலஜி படம்:
இதில் ஒன்பது படங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த 9 படத்தில் இயக்குனர் ஜெயராஜ் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். அதற்கு இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். மேலும், ஒல்லவும் தீரவும் என்ற படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கி இருக்கிறார். அதை தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் ‘கடுகண்ணவ ஒரு யாத்திரா’, இயக்குநர் ஷ்யாம் பிரசாத் ‘கல்சா’, பிரியதர்ஷன் ‘ஷிலாலிகாதம்’, அஸ்வதி வி.நாயர் ‘வில்பனா’, மகேஷ் நாராயணன் ‘ஷெர்லாக்’ என இயக்கி இருக்கிறார்கள். இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றிருந்தது.
#Mammootty #Mohanlal #asifali #malayalam #rameshnarayanan .. Ramesh Narayanan fraud insulting Asif Ali pic.twitter.com/uoMf0CqAor
— കൊണാപ്പൻ (@keanappa1) July 16, 2024
விருதை வாங்க மறுத்த ரமேஷ் நாராயணன்:
இந்நிலையில் இந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணனுக்கு விருது வழங்கப்பட்டிருந்தது. அந்த விருதை மலையாள நடிகர் ஆசிப் அலி மேடையில் இருந்து இறங்கி போய் இசையமைப்பாளர் ரமேஸ் நாராயணன் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று கொடுத்திருந்தார். ஆனால், அந்த விருதை ரமேஷ் நாராயணன் அவருடைய கையால் வாங்க மறுத்திருக்கிறார். அதற்குப் பின் அந்த விருதை இயக்குனர் ஜெயராஜை கொடுக்க சொல்லி இருக்கிறார்.
நெட்டிசன்கள் கண்டனம்:
நடிகர் ஆசிப் அலியும் எதுவும் பேசாமல் அமைதியாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றிருந்தார்.
இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ரமேஷ் நாராயணன் செயலை கண்டித்து கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன், என்னை மேடைக்கு அழைத்து விருது கொடுக்காதது எனக்கு வருத்தம் அளித்தது. ஆசிப் தான் எனக்கு விருது கொடுக்க வருகிறார் என்பது எனக்கு தெரியாது. எனக்கு வயதாகிவிட்டது.
ரமேஷ் நாராயணன் விளக்கம்:
ஒரு வேளை மேடையில் எனக்கு விருது கொடுக்கப்பட்டிருந்தால் என்னை நோக்கி யாரோ விருது கொடுக்க வருகிறார்கள் என்பதை அறிந்திருப்பேன். பிறரை புண்படுத்துவது என்னுடைய நோக்கம் கிடையாது. ஒரு நடிகராக அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால் அதற்கு வருந்துகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். உண்மையை புரிந்து கொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் தேவையில்லாமல் கருத்துக்களை பதிவிட்டு பிறருடைய மனதை வருத்தமடைய வைக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார்.