இளையராஜாவ பாக்க பான்பராக் வாங்கிட்டு போவேன்- சினிமா வாய்ப்பு குறித்து மனம் திறந்த இளையமைப்பாளர் பரணி

0
2248
- Advertisement -

தன்னுடைய திரைப்பயணம் குறித்து இசையமைப்பாளர் பரணி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான இசை அமைப்பாளராக இருந்தவர் பரணி. இவருடைய உண்மையான பெயர் குணசேகரன். இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர். இவர் 1989 ஆம் ஆண்டுகளில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். முதலில் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த நாளை தீர்ப்பு படத்தின் மூலம் தான் பாடலாசிரியராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார் . அதற்கு பின்பு தான் இவர் பெரியண்ணா படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஆனார் .

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.
அமைத்தது மட்டுமில்லாமல் இவருடைய சொந்த குரலிலும் சில பாடல்களை பாடியிருக்கிறார். பின் இவர்
கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஒண்டிக்கட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார். அதற்குப் பிறகு பெரிதாக இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

- Advertisement -

இசையமைப்பாளர் பரணி அளித்த பேட்டி :

இந்நிலையில் இசையமைப்பாளர் பரணி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் தன்னுடைய திரை பயணம் குறித்து கூறியிருந்தது, நான் வெறும் 80 ரூபாய் வைத்துக்கொண்டு தான் சென்னைக்கு வந்தேன். எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் அழுது கொண்டே சென்னைக்கு வந்தேன். பின்
அடையாரில்ஒரு டீக்கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு டம்பளர் கழுவி என் கையெல்லாம் புண்ணாகிறது. அப்போது கிடைக்கும் நேரங்களில் பாடல் வரிகளை எழுதி பாட்டு பாட முயற்சித்தேன். எனக்கு எந்த ஒரு இசை பயிற்சியும் கிடையாது.

இளையராஜா குறித்து சொன்னது:

எனக்கு தோன்றியதை எழுதி பாடிக்கொண்டிருந்தேன். அதற்கு பிறகு தான் சினிமாவில் முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்தோம். பின் இளையராஜாவை சந்தித்து எப்படியாவது அவரிடம் ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்து பலமுறை அவருடைய வீட்டு வாசலில் நின்றிருந்தேன். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின் இளையராஜாவிடம் எடுபிடியாக இருந்த ஒரு நபரை வைத்து நானும் அங்கே எடுபிடியாக வேலை செய்தேன். அவர்களுக்கு சிகரெட், பாண்பிராக் வாங்கி கொடுப்பது என்று வேலைகளை செய்து கொண்டே இசைக்கருவிகளை வாசிப்பது குறித்து கற்றுக் கொண்டேன்.

-விளம்பரம்-

சினிமா பயணம் குறித்து சொன்னது:

அப்படியே ஒரு ஆறு வருடம் சென்று விட்டது. அதற்கு பிறகு தான் நான் பாடலாம் என்று முடிவு செய்து வாய்ப்பு கேட்டேன். அதற்கு பிறகு தான் எஸ்ஏ சந்திரசேகரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த நாளைய தீர்ப்பு படத்தில் நான் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானேன். அந்த படம் பெரிய அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் எஸ்.ஏ சந்திரசேகருக்கும் எனக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டது. எனக்கு பரணி என்று பெயர் வைத்தவர் எஸ்ஏ சந்திரசேகர் தான்.

சினிமா வாய்ப்பு குறித்து சொன்னது:

பின் 1999 களில் நான் இசையமைப்பாளராக அறிமுகமானேன். அதனை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் நான் இயக்குனராகவும் ஒரு படத்தை எடுத்திருக்கிறேன். சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நான் வாய்ப்பு கேட்டதற்கு ஏதாவது ஒரு இயக்குனரை சிபாரிசு பண்ண சொல்ல கேட்டிருந்தார்கள். நான் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தும் படத்தை இயக்கியிருந்தும் என்னுடைய திறமைக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இனி வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement