அந்தப் பாட்டு மட்டும் இப்ப வந்து இருந்தா அவ்வளவு தான். இசையமைப்பாளர் பரத்வாஜ் பேட்டி.

0
68183
Ajith-Bharadwaj

தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த்– கமலஹாசனுக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். அதுமட்டும் இல்லாமல் தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் சினிமா உலகில் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். மேலும், இவர்கள் இருவருக்கும் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். இருந்தாலும் அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. எப்போதுமே விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் இடையே சண்டை, சச்சரவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. உண்மையிலேயே சொல்லப்போனால் அஜித்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள் தான்.

Video Source : Behindwoods

இவர்களுடைய ரசிகர்கள் தான் இவர்களை எதிரிகளாக பாவித்து விடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். மேலும், தமிழகத்தில் “தல, தளபதி” என்று சொன்னாலே போதும் வெறித்தனம் தான். இந்நிலையில் ஆரம்ப காலத்திலிருந்தே இப்போது வரை அஜித்–விஜய் ரசிகர்கள் மாற்றி மாற்றி திட்டிக் கொள்வது வழக்கமான ஒன்று. விஜய் மற்றும் அஜித் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இப்போது வரை இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியாக கடும் போட்டி நிலவி கொண்டு தான் வருகிறது. இவர்களது படங்களில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பல வசனங்களை பேசி உள்ளதையும் நாம் அறிவோம்.

- Advertisement -

இவர்களுடைய ரசிகர்கள் தான் இவர்களை எதிரிகளாக பாவித்து வருகின்றனர். இது குறித்து பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் கூட சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தமிழ் திரைப் படத்துறையில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் பரத்வாஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் திருவள்ளுவரின் உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு இசை வடிவம் கொடுத்து புகழ் பெற்றவர். சரண் இயக்கத்தில் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த காதல் மன்னன் படத்தின் மூலம் தான் பரத்வாஜ் அவர்கள் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானர்.

இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த பல படங்களுக்கு இசை அமைத்து உள்ளார். அப்போது இவர் தல அஜீத்துக்காக எழுதிய பாடல் ஒன்று விஜயை தாக்கி எழுதியது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியது, சினிமா உலகில் பொருத்தவரை பிரபலமான ஹீரோக்கள் படங்களுக்கு எந்த ஒரு பாட்டு எழுதினாலும் ஹிட்டாகிவிடும். அது பத்தி கவலையே பட வேண்டாம். ஆனால், தல அஜித் அவர்களுக்கு நான் பாட்டு எழுதும் போது அவர் அந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. அப்ப எனக்கு பயங்கர டென்ஷன் ஒரு பக்கம் இருந்தது. ஏன்னா, தமிழ்ல எனக்கு அது தான் முதல் பாட்டு . காதல் மன்னன் படத்தில் “உன்னை பார்த்து பின்பு தான்” பாட்டு பயங்கர ஹிட். அட்டகாசம் படத்தின் போது தல அஜித் முன்னணி ஹீரோவாக இருந்தார்.

-விளம்பரம்-

தீனா படத்திற்கு பிறகு தான் அவருக்கு தல என்ற பெயர் வந்தது. அதனால் அதை வச்சு பாட்டு எழுத்தனேன். அதுமட்டும் இல்லாமல் அப்போது விஜயும், அஜித்தும் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருந்து வந்து காலம். அஜித்துக்காக நான் “உனக்கு என்ன உனக்கு என்ன”என்ற பாடலை விஜய் வைத்து தாக்குற மாதிரி எழுதினோம். அந்தப் பாட்டு மட்டும் இப்ப வந்து இருந்தா அவ்வளவு தான். இப்ப இருக்கற சோசியல் மீடியாவுக்கு எவ்வளவு பிரச்சனை வந்து இருக்குமோ? என்று கூறினார்.

Advertisement