'லப்பர் பந்து' படக் காட்சியை தனது வாழ்க்கையோடு ஒப்பிட்டு இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தான் ‘லப்பர் பந்து’. இந்த படத்தை எஸ்.லட்சுமணன் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் குமார், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டிஎஸ்கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். படத்தில் அட்டகத்தி தினேஷ் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார். இவர் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் சிறந்த வீரராக இருக்கிறார். இவர் அடிக்கும் ஒவ்வொரு பந்துமே சிக்ஸர் தான். இவர் விளையாடும் டீம் தான் கோப்பையை தட்டிச் செல்லும். ஆனால், இவர் கிரிக்கெட் விளையாடுவது அவருடைய மனைவிக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்னொரு பக்கம் ஹரிஷ் கல்யாண் பந்துவீச்சில் பட்டய கிளப்புபவர்.
லப்பர் பந்து படம் :
இவர் பந்து வீசினால் பேட்டிங் பண்ண அனைவருமே தடுமாறுவார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தினேஷுடைய திறமையை தெரிந்த ஹரிஷ் கல்யாண் எப்படியாவது அவரை விக்கெட் எடுக்க வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போட்டா போட்டிகள், பொறாமைகள், சரிக்கு சரி என்று தன்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வேட்கை என கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.
https://www.youtube.com/watch?v=1jrjdu1VO-o
லப்பர் பந்து படக் காட்சி:
இந்தப் படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சி வரும். அந்த காட்சியில், ஒரு பேருந்தில் 'ராசிதான் கை ராசிதான்' பாட்டை போட்ட உடனே ஒருவர் அந்த பாட்டை ரசித்து கொண்டே 'ராஜா ராஜா தான்' என்று சொல்வார். அதற்கு மற்றொருவர், 'ராஜா ராஜா தான் ஆனா, இது தேவா பாட்டு' என்று கூறுவார். இந்த காட்சி மக்கள் அனைவரையும் கவனிக்க வைத்தது. ஏனென்றால், இளையராஜாவிற்கு இணையாக இசையமைப்பாளர் தேவா இசை அமைத்தும், அவருக்கு இளையராஜா அளவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில பாடல்கள் எல்லாம் தேவா இசையமைத்தும், அதை இளையராஜா தான் இசையமைத்தார் என்று நினைத்துக் கொண்டு நாம் இதுவரை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
தேவா பேட்டி :
இந்நிலையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட தேவாவிடம் 'லப்பர் பந்து' படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'லப்பர் பந்து' படம் நான் பார்த்தேன். எனக்கு என்னோட போனுக்கு என்னைப் பற்றி இருக்கற காட்சியை அனுப்பி வைத்திருந்தார்கள். முதல் சீனே ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு மனசுக்கு சந்தோஷமான ஒரு டயலாக் அதில் இருந்தது. அப்புறம் அந்த டைரக்டர் வெளியே வந்து ஒரு பேட்டியை கொடுத்தார். அந்தப் படத்தில் 'இது தேவா பாட்டு என்று சொல்லி இருக்கீங்களே' என்று கேள்வி எழுப்பியதற்கு. அவர், 'எவ்வளவு நல்ல மெலோடி பாடல்கள் தேவா மியூசிக் இல்லை வேற யாரோ மியூசிக் டைரக்டர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அப்போ தேவாவுடைய வலி எப்படி இருந்திருக்கும்' என்று ஒரு நல்ல பாயிண்ட் சொன்னாரு. இப்பதான் ரசிகர்களுக்கு எல்லாம் இது தேவா பாட்டு தான் என்று தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

கஷ்டமாக இருக்கும்:
நான் இதற்கு அதை சொல்கிறேன் என்றால், ஒரு கான்சர்ட்க்காக, பாட்டு லிஸ்ட் என்னை அனுப்ப சொன்னாங்க. நான் அனுப்பி வைத்த உடனே, அவங்க போன் பண்ணி, 'தேவா சார் உங்க பாட்டு மட்டும் போதும் எதுக்கு வெளி மியூசிக் டைரக்டர் ஓட பாட்டு போட்டு இருக்கீங்க' என்று கேட்டாங்க. அதற்கு எல்லாம் என் பாட்டு தானே என்று சொன்னேன். அதற்கு அவர் 'கொஞ்ச நாள் பொறு தலைவா' பாட்டு உங்க பாட்டு இல்லையே என்று சொன்னார். இல்லை சார் அது என் பாட்டு தான் என்று சொன்னதற்கு, அதெல்லாம் உங்க பாட்டா என்று கேட்டாங்க. அப்போ அந்த பாடல்களை உருவாக்கின எனக்கு எவ்ளோ கஷ்டமாக இருந்திருக்கும். ஆனா, இப்பதான் எல்லாருக்கும் தெரிய வருகிறது என்று கூறியுள்ளார்.






