‘தங்கலான்’ இசை வெளியீட்டு விழாவில் ஜி.வி.பிரகாஷ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது. சமீபகாலமாக ‘தங்கலான்’ படம் குறித்து செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் ‘தங்கலான்’. கேஜிஎஃப் இல் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் உடன் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
தங்கலான் இசை வெளியீட்டு விழா:
குறிப்பாக, இந்த விழாவில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். படம் அனுபவம் குறித்து இந்த விழாவில் படக்குழுவினர் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். மேலும், விழாவில் பேசிய ஜி.வி.பிரகாஷ், இது இயக்குனர் ரஞ்சித் உடைய கனவு படம். இங்கு இருக்கிற ஒவ்வொருவருமே பயங்கரமாக உழைத்திருக்கிறார்கள். அதில் நானும் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். இந்த படத்தில் பழங்குடி மக்களுடைய இசையை கொண்டு வருவதற்கு முயற்சி பண்ணி இருக்கேன்.
ஜி.வி.பிரகாஷ் சொன்னது:
முதல் நாளில் இருந்து இந்த படத்தில் பணியாற்ற நான் ஆர்வமாக இருந்தேன். இந்த மாதிரியான படங்களில் வேலை பார்ப்பதெல்லாம் எப்போவாவது தான் வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பு எனக்கு மதராஸ் பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், அசுரன் போன்ற படங்களில் கிடைத்தது. விக்ரம் சார் கூட தெய்வமகள், தாண்டவம் போன்ற படங்களில் நான் பணியாற்றி இருந்தேன். இப்போது தங்கலான் படத்தில் இணைந்திருக்கிறேன். வாய்ப்பளித்த படக்குழுவினருக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குறித்த தகவல்:
கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக ‘வெயில்’ என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.
ஜி.வி.பிரகாஷ் திரைப்பயணம்:
அதன் பின் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். மேலும், இவர் ஹீரோவாக நடித்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. நடிக்கவும் தொடங்கினார். ஆனால், சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஒரு நல்ல கம்பேக்காக ஜி.வி.பிரகாஷ் போராடி கொண்டு இருக்கிறார்.