கடந்த சில தினங்களுக்கு முன்னர் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த திரைப்படமாக அசுரன் திரைப்படமும் அறிவிக்கப்பட்டு இருந்தது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருதும் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு இரண்டு விருதும் அறிவிக்கப்பட்ட நிலையில் விஸ்வாசம் படத்திற்காக இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தேசிய விருதை வென்ற இமானுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதே போல தேசிய விருதை வென்ற இமானுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில், “வாழ்த்துகள், தகுதியான விருது” என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். ரகுமானின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்ட இமான் ”இந்த வாழ்த்தை உங்களிடமிருந்து பெற்றது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம். நீங்களும் இளையராஜா அவர்களும் என் வாழ்க்கையில் பெரிய உந்துசக்திகளாக இருந்திருக்கிறீர்கள். இறைவனுக்கு நன்றி” என்று பதிவிட்டு இருந்தார்.
இதையும் பாருங்க : கோவிலில் பிச்சை எடுத்த காதல் பட நடிகர் – அனாதை பிணமாக ஆட்டோவில் கிடந்த கொடுமை – புகைப்படம் இதோ.
இப்படி ஒரு நிலையில் தேசிய விருது வென்ற இமானுக்கு ரஜினி, விஜய், அஜித் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இமான் “தேசிய விருது பெற்றதற்காக, ரஜினி சார் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதேபோல் விஜய் அண்ணனும், அன்பு அஜித் அண்ணனும் எனக்குத் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்திருப்பதும் என்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. எனது இசைப்பயணம் விஜய் அண்ணனுடன் தான் தொடங்கியது. அவரது ‘தமிழன்’ படத்திற்குத்தான் நான் முதன்முதலாக இசையமைத்தேன்.
இப்போது ‘விஸ்வாசம்’ படத்திற்கு எனக்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்துக்கு விஜய் அண்ணா வாழ்த்து தெரிவித்திருப்பது தனிச்சிறப்பானது ” என்று பதிவிட்டுள்ளார். இமான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுமானது விஜய்யின் ‘தமிழன்’ படத்தின் மூலம் தான் . அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து விஜய்யின் ‘ஜில்லா’ படத்திற்க்கு இசையமைத்து இருந்தார். அதே போல தற்போது ‘அண்ணாத்த’ படத்தின் மூலம் முதன் முறையாக ரஜினியின் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் இமான் என்பது குறிப்பிடத்தக்கது.