தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளராக திகழ்கிறார் டி இமான். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தமிழன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் 2000 ஆண்டு வெளிவந்த தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. ஆனால், படம் வெற்றி பெறாததால் இவருக்கான வாய்ப்பு குறைந்தது. அதற்கு பின் தான் இவர் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பரவலாக அறியப்பட்டார்.
பின் அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் இசைத்திருக்கிறார். மேலும், இவர் மருது, கயல், ஜீவா, சிகரம்தொடு, கும்கி, மைனா என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தல அஜித்தின் விசுவாசம் படத்தில் இவர் இசையமைப்பாளராக பணியாற்றினார். இவருடைய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இமான் இசைத்த படங்கள் :
மேலும், இப்படி இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் விஜய், அஜித் துவங்கி சிவகார்த்தியன் என்று பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்லவரை பெற்றிருந்தது.
சின்னத்திரை சீரியல்கள்:
இந்நிலையில் பெரும்பாலும் இவர் படங்களுக்கு இசையமைப்பாளர் என்று பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் சின்னத்திரை தொடருக்கு இசை அமைத்து இருக்கிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அந்த வகையில் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனல் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதில் பல சூப்பர் ஹிட் சீரியலுக்கு டி இமான் இசையமைத்திருக்கிறார்.
டி இமான் இசைத்த சீரியல்கள்:
இவர் கிருஷ்ணதாசி, சிகரம், மந்திரவாசல், கோலங்கள், கல்கி, திருமதி செல்வம் போன்ற ரசிகர்கள் பலரும் ரசித்த தொடர்களின் முகப்பு பாடல்களுக்கு டி இமான் தான் இசையமைத்து இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு விழா மேடையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, டி. இமானை குறித்து பெருமையாக பேசி இருந்தார். அது என்னவென்றால், தனது அப்பாவின் சாயலை டி இமான் இசையில் நான் உணர்கிறேன் என்று கூறியிருந்தார்.
டி இமான் இசை பற்றிய தகவல்:
மேலும், டி இமான் ஒரே வகையான கதை படங்களை மட்டுமில்லாமல் திகில் படங்கள், விருவிருப்பு படங்கள், கிராமத்து படங்கள் காதல் படங்கள், நகரத்தை மையமாக உருவாகும் படங்கள் என அனைத்து வகை படங்களுக்கும் இசையமைத்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கிறார். இப்படி தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர் டி. இமானுக்கு இன்று பிறந்தநாள். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் டி இமானின் புகைப்படங்களை பதிவிட்டு ட்ரெண்டிங் ஆக்கிய வருகிறார்கள்.