அட சனாவின் மனைவியா இவங்க தானா. – இந்த பாடல் அவர் பாடியதுதானா – வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்

0
4346
- Advertisement -

பாடகர் சந்தோஷ் நாராயணனின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபலமான பாடகராக திகழ்பவர் சந்தோஷ் நாராயணன். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தினேஷ் நடிப்பில் வெளிவந்த அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே இவருடைய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவர் பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, பில்லா, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற பல திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் படங்களுக்கு மட்டும் இல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். மேலும், இவர் தன்னுடைய இசை திறமைக்காக பல விருதுகளை வாங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் குறும்படங்களுக்கு தான் இசை அமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சந்தோஷ் நாராயணன் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித்-சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் வெளிவந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களும் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் மத்தியில் ப்ரச்சனை என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், விஜயின் பைரவா, தனுஷின் கொடி, வடசென்னை, சூப்பர் ஸ்டாரின் காலா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் குடும்பம்:

இந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பாடகர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் மீனாட்சி ஐயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீக்ஷிதா என்ற மகள் இருக்கிறார். இவரை தீ என்று தான் செல்லமாக அழைப்பார்கள். தீக்ஷிதா ஒரு பிரபலமான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே.

-விளம்பரம்-

சந்தோஷ் நாராயணன் மனைவி:

இவர் பாடிய பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதிலும், குறிப்பாக இவர் பாடிய என்ஜாய் என்சாமி பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. தற்போது சந்தோஷ் நாராயணன் அவர்கள் பாடல்களுக்கு மட்டுமில்லாமல் பின்னணி இசைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதோடு இவருடைய மனைவி மீனாட்சி ஒரு பாடகி.

வைரலாகும் புகைப்படம்:

இவர் சந்தோஷ் நாராயணனை விட ஏழு வயது மூத்தவர். தற்போது இவருக்கு 47 வயதாகிறது. இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் படத்தில் டைட்டில் பாடலை பாடி இருந்தார். தற்போது இவர்களுடைய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்

Advertisement