நடிகர் சங்க வாட்ஸ் அப் குரூப்பிலும் மோதல் – நடிகைனா வேற தொழில் பண்றவங்களா – புலம்பும் முதல் மரியாதை பட நடிகை.

0
1545
Ranjini
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-
நடிகை ரஞ்சனி: சின்னத்திரைக்கு ...

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஷேர் செய்த வண்ணமுள்ளனர். அதில் பாட்டு பாடுவது, சமைத்து கொண்டிருப்பது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது, டிக் டாக் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் பிரபல நடிகர்கள் கார்த்தி – விஷால் – நாசர் போன்றவர்கள் அட்மினாக இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வாட்ஸ் அப் க்ரூப் மூலம் ஒரு பிரச்சனை கிளம்பியிருக்கிறது. அந்த க்ரூப்பில் ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் வேலையில்லாத நலிந்த கலைஞர்களுக்கு யார் அதிகம் நிதியுதவி அளித்தது என்ற ரீதியில் ஒரு பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. அப்போது, நாடக கலைஞர் வாசுதேவன் என்பவர், அவர் நாடக கலைஞர்களுக்கு செய்த உதவியை பற்றி சொல்லியிருக்கிறார்.

-விளம்பரம்-

அதை பார்த்த ‘முதல் மரியாதை’ பட நடிகை ரஞ்சனி “இவர் யார்? நல்ல பி.ஆர். வொர்க் பண்றாரே” என்று கேட்டிருக்கிறார். நடிகை ரஞ்சனி இப்படி கேட்டது, வாசுதேவனிற்கும், க்ரூப்பில் இருக்கும் மற்ற நாடக நடிகர்களுக்கும் கோபத்தை வரவழைத்து விட்டதாம். இதற்கு பதிலாக “நான் ஒரு நாடக நடிகர்.. உங்க தொழில் தான் வேறு” என்று வாசுதேவன் கூறியிருக்கிறார். அதன் பிறகு க்ரூப்பில் பலரும் இதை பற்றி பேசி சண்டை போட்டுள்ளனர். இது தொடர்பாக வாசுதேவன் பேசுகையில் “நான் ஒரு நாடக நடிகர்.. உங்க தொழில் சினிமா.. இரண்டுமே வேறு என்ற ரீதியில் தான் நான் பேசியிருந்தேன். ஆனால், நடிகை ரஞ்சனி என்னை மன்னிப்பு கேட்க சொல்றாங்க” என்று கூறினார். மேலும், அவர் நடிகை ரஞ்சனி தன்னை அவதூறாக பேசினார் என்று கூறி திருவண்ணாமலை எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

நாடக கலைஞர் வாசுதேவன்

இது தொடர்பாக நடிகை ரஞ்சனி பேசுகையில் “சினிமா வட்டாரத்தில் தொழில்ங்குற வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு அவருக்கு தெரியாதா? அது எவ்வளவு பெரிய வார்த்தை தெரியுமா? அதுனால நான் வாசுதேவன் மேல வழக்கு போட போறேன். இதுல எனக்கு ரொம்ப ஷாக்காக இருந்தது என்னன்னா, ஒரு நடிகைகிட்ட சக நடிகர் தவறா பேசுறார். ஆனால், இந்த க்ரூப் அட்மினா இருக்குற பிரபல நடிகர்கள் கார்த்தி – விஷால் – நாசர் யாருமே எனக்கு சப்போர்ட்டா எதுவும் பதில் சொல்லவே இல்லை” என்று தெரிவித்தார்.

Advertisement