ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஷங்கர் மற்றும் அர்ஜுன் இருவருக்குமே இந்த படம் ஒரு நல்ல பிரேக்காக அமைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷங்கரிடம் இந்தியன் 2 போலவே ‘முதல்வன் 2’ எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த ஷங்கர், அதற்க்கு தகுந்த போல் ஒரு கதை உருவாக வேண்டும், அந்த கதை யாரை தேடுகிறதோ அவருடன் பணியாற்றுவேன், அது விஜய் என்றால் ஓகே தான்’ என்று கூறியுள்ளார்.
இதையும் பாருங்க : நீ மூனு பேரை விட்டுட்டு வந்தவ தான.! வனிதாவை வெளுத்து வாங்கும் முன்னாள் போட்டியாளர்.!
எனவே , முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா என்ற மிகப்பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. சொல்லப்போனால் எந்திரன் படத்திற்கு முன்பு சங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்ததில்லை. ஆனால், 1999ஆம் ஆண்டு வெளிவந்து செம்ம ஹிட் முதல்வன் படத்தில் நடிக்க முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினியிடம்தான் பேசப்பட்டது.
ஆனால், அப்போதைய அரசியல் காரணங்களால் ரஜினி அதில் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பின்னர், விஜய்க்கு வந்தது ஆனால், விஜயும் பிஸியாக இருந்ததால் அர்ஜுனுக்கு சென்றது.இந்நிலையில் தற்போது எந்திரன் 2 படத்தை தொடர்ந்து கமலை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை எடுக்கவுள்ளார் ஷங்கர்.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் வில்லன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முதல்வன் படத்தின் ஹீரோவாக நடித்த அர்ஜுன் தான் இந்த இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்கிறாராம். ஏற்கனவே விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்திருந்தார். எனவே, விஜய்யுடன் அர்ஜுனின் காம்பினேஷன் மெர்சலாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.