தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. இவர் சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் 4-வது மகனாக விழுப்புரத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தவர். இவருடைய இயற்பெயர் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி. இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்துக்கொண்டிருந்தார். பின் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் தமிழ் மொழியில் மட்டும் 250 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக சிவாஜி நடித்திருக்கிறார். இவர் நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்று கூறினால் அது மிகையாகாது. தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும், ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசன் குறித்த தகவல்:
இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் சிவாஜி கணேசன். கடைசியாக இவர் நடித்த படம் படையப்பா. மேலும், இவருடைய மகன் பிரபு. இவர் தன் தந்தையைப் போல் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரை தொடர்ந்து இவருடைய மகன் விக்ரம் பிரபு.
சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழா:
தற்போது விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி சிவாஜி கணேசன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் சினிமாவில் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா, பிரபு, விக்ரம் பிரபு, கவிஞர் முத்துலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டு இருந்தார்கள்.
கவிஞர் முத்துலிங்கம் சொன்னது:
அப்போது நிகழ்ச்சியில் முத்துலிங்கம் அவர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை குறித்து பெருமையாக பேசி இருந்தார். அவருடைய இசை குறித்தும், அவருக்கு மோடி வகித்த பதவி குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். இதனால் அங்கிருந்த பத்திரிக்கையாளர், இது சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழா. அவரைப் பற்றி பேசுங்கள். எதற்கு இளையராஜாவை பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டவுடன் கவிஞர் முத்துலிங்கத்திற்கு கோபம் வந்து சிவாஜி கணேசனை பற்றி பேச நிறைய பேர் இருக்கிறார்கள்.
கடுப்பான முத்து லிங்கம் :
போய் வேலைய பார் என்று சொல்லி சென்றுவிட்டார்.இதனால் பிரபு பத்திரிகையாளர்களை கையெடுத்து கும்பிட்டு சமாதானம் செய்தார். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடி என்னும் சிற்றூரைசேர்ந்தவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே தமிழின் மீது அதிக பற்று கொண்டவர். 15 வயதிலேயே இவர் கவிதை எழுதத் தொடங்கினார். அதற்குப்பின் இவர் பல கவிஞர் கவிதைகளை எழுதி இருக்கிறார். இவர் கவிதைகள் மட்டும் இல்லாமல் 1500 திரைப்பாடல்களையும் எழுதி இருக்கிறார். இவர் கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர், கலைத்துறை வித்தகர் விருது போன்ற பல விருதுகளை பெற்றிருக்கிறார்.