விஜய் டிவியில் வராததற்கு இதுதான் காரணம் என்று வெளிப்படையாக மைனா நந்தினி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நந்தினி. இவர் சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டு தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
தற்போது இவர் படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருந்த சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸில் அமுதா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் மைனா நந்தினி நடித்திருந்தார். இதை இயக்குனர் ராதா மோகன் இயக்கி இருக்கிறார். இதில் வாணி போஜன், நிழல்கள் ரவி, சார்லி, இளங்கோ குமரவேல், நிதின் சத்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் .
சட்னி சாம்பார் படம் :
முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதில் நந்தினியின் நடிப்பில் பாராட்டை பெற்று இருக்கிறது. இதை தொடர்ந்து இவர் படங்களிலும், வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நந்தினியிடம், நீங்கள் முன்பு மாதிரி ஏன் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு வருவதில்லை? யாரும் உங்களை கூப்பிட வில்லையா? உங்களுக்கும் விஜய் டிவி நிறுவனத்திற்கும் ஏதாவது பிரச்சனையா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.
மைனா நந்தினி பேட்டி :
அதற்கு மைனா நந்தினி, அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. ஆரம்பத்தில் டிவி சேனல்களில் வந்த பல நிகழ்ச்சிகளில் நான் கலந்திருந்தேன். அதன் மூலம் தான் எனக்கு இப்போது பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. டிவி நிகழ்ச்சி மூலம் தான் நான் மக்கள் மத்தியில் பிரபலமாக தெரிய ஆரம்பித்தேன். தற்போது நான் என்னுடைய கனவை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அதனால் தான் என்னுடைய அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறேன்.
விஜய் டிவிக்கு வராத காரணம்:
எனக்கு யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது. மேலும், நிகழ்ச்சிகளில் என்னை கூப்பிடுகிறார்கள். ஆனால், என்னால் தான் இப்போது முன்பு போல் கலந்து கொள்ள முடியவில்லை. காரணம், அடுத்தடுத்த பட வாய்ப்புகள், வெப்சீரிஸ்களில் பிசியாக இருக்கிறேன். அதில் நான் கவனத்தை செலுத்தி வருகிறேன். சோசியல் மீடியாவில் தேவை இல்லாமல் வதந்திகளை கிளப்புகிறார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நந்தினி.
மைனா நந்தினி குறித்த தகவல் :
அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். அதன் பிறகு இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இடையில் நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குனராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல், படங்கள் என்று மைனா நந்தினி பிசியாக சுற்றி கொண்டு வருகிறார்.