கப்பலில் ரொமான்ஸ், ஷிவானியுடன் காட்சி – விக்ரம் படத்தில் தனது Delete செய்யப்பட்ட காட்சிகள் குறித்து மனம் திறந்த மைனா நந்தினி. இதோ வீடியோ.

0
1107
myna
- Advertisement -

விக்ரம் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து மைனா நந்தினி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

இதையும் பாருங்க : ‘அவன் டைரியில என் பெயர் இருந்துள்ளது’ அனாதையாக இருந்து கிடந்த தன் படத்தின் நடிகருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இயக்குனர்.

- Advertisement -

விக்ரம் படம் பற்றிய தகவல்:

மேலும், லோகேஷை பாராட்டி கமல் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அந்த கடிதம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதற்கு லோகேஷ் கனகராஜ் life-time செட்டில்மெண்ட் என்றும் கூறியிருந்தார். அதோடு இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமல் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார். சமீப காலங்களில் வெளிவந்த படங்களில் இந்த அளவுக்கு மாசான காட்சிகளில் கமல் நடித்ததில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான்.

This image has an empty alt attribute; its file name is 1-72.jpg

கமல் கொடுத்த பரிசு:

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகார்ஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்தார் கமல். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கும், சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்துள்ளார் கமல். இந்த நிலையில் விக்ரம் படத்தில் டெலிட் ஆன காட்சி குறித்து நடிகை மைனா நந்தினி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மைனா நந்தினி அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, விக்ரம் படத்தில் நான், விஜய் சேதுபதி விஜய் சாருடன் நடித்த சில காட்சிகள் டெலிட் ஆகி இருக்கிறது. நான் உட்கார்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருப்பேன். விஜய் சேதுபதி கேட்டிருப்பார். ஒவ்வொருவருக்கும் இவ்வளவு கொடுக்கணும் அவ்வளவு கொடுக்கணும் என்ற சொல்லி கொண்டு இருக்கும் போது சிவானி வருவார். இந்த மூன்றாவதுக்கு பத்து லட்சம் என்று சொல்லுவேன். அந்த காட்சியை நீக்கி விட்டார்கள்.

நீக்கம் செய்யப்பட்ட காட்சிகள்:

அதேபோல் கப்பலில் ஒரு ட்ரமுக்குள் ஒருவரை கொன்று விஜய் சேதுபதி சார் போட்டு வைத்து இருப்பார். அப்போது நான் அவருக்காக மீன் வறுத்து கொண்டு இருப்பேன். அவரைக் கொன்று விட்டு உடனே விஜய் சேதுபதி சார் என் பக்கத்தில் உட்கார்ந்து ரொமான்ஸாக மீன் சாப்பிடுவார். அந்தக் காட்சியும் டெலிட் செய்து இருந்தார்கள். இருந்தாலும் விஜய் சேதுபதி, கமல், பகத் பாசிலுடன் நடித்த அனுபவங்களை என்னால் மறக்கவே முடியாது என்று கூறி இருந்தார்.

Advertisement