நள்ளிரவில் நடுத்தெருவில் இருந்து வீடியோ வெளியிட்ட மைனா நந்தினி – சேட்டப் புடிச்சவங்க சார்.

0
512
- Advertisement -

நள்ளிரவில் நடுத்தெருவில் நின்று மைனா நந்தினி செய்த டப்ஸ்மாஷ் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் மைனா நந்தினி. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பின் விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-
Vijay Tv Myna Nandhini Posted Baby Bump Photo Agian

அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நந்தினி நடித்திருந்தார். அதன் பிறகு இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இடையில் நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குனராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

- Advertisement -

மைனா நந்தியின் திரைப்பயணம்:

ஆனால், மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என்று மைனா நந்தினி பிசியாக கலக்கிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் வெளியான சுந்தர் சியின் அரண்மனை 3 படத்தில் மறைந்த நடிகர் விவேக் ஜோடியாக மைனா நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருந்தது.

சின்னத்திரையில் மைனா நந்தினி:

இப்படி தொடர்ந்து நந்தினி பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
அதேபோல் இவர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை மைனா தொகுத்து வழங்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

-விளம்பரம்-

நந்தினி யூடியூப் சேனல்:

அதுமட்டுமில்லாமல் மைனா நந்தினியும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து மைனா விங்ஸ் என்ற பெயரில் யூடியூபில் தனியாக சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அதில் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் செய்யும் காமெடி வீடியோக்களை அதிகம் பதிவேற்றி வருகிறார். மேலும், இவர் பதிவிடும் வீடியோ எல்லாம் யூட்டூபில் படு வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இவர்கள் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள்.

மைனா டப்ஸ்மாஷ் வீடியோ:

சமீபத்தில் மைனா மற்றும் யோகி இருவரும் துபாய் சென்று இருந்தார்கள். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படம், வீடியோக்களை dubai tour vlogs என்று பெயரில் வெளியிட்டு இருந்தார்கள். இந்த நிலையில் மைனா வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அது என்னவென்றால், நள்ளிரவில் நடுத்தெருவில் நின்று டப்ஸ்மாஷ் செய்த நகைச்சுவையான வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement