Home பொழுதுபோக்கு சமீபத்திய

எப்படி கலர் ஆனீங்க ? ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த மைனா நந்தினி – அட ரொம்ப ஈசியான வழியா இருக்கே

0
287
myna
-விளம்பரம்-

மைனா என்று சொன்னவுடனே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது விஜய் டிவி சீரியல் நடிகை மைனா நந்தினி தான். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். இவர் மதுரையை சேர்ந்தவர். மேலும், இவர் சின்னத்திரையின் மூலம் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடைய வட்டார மொழி பேச்சு மூலம் சுலபமாக ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். ஆனால், தன்னுடைய டஸ்கி ஸ்கின்னால் வெற்றி அடைய முடியவில்லை. அதற்கு பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என்று மைனா நந்தினி கலக்கிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-
Nandhini Myna

சில வருடங்களுக்கு முன் மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு பிறகு நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குனராக இருக்கும் யோகேஸ்வரன் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. இதனிடையே இவருடைய டஸ்கி ஸ்கின்னால் பல இடங்களில் அவமானப்பட்டு வெளியில் வந்து இருக்கிறார். இது குறித்து நந்தினியே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார்.

இதையும் பாருங்க : ‘நீ இன்னும் சாகலயா’ விபத்துக்கு பின் யாஷிகா பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு வந்த கமன்ட் – யாஷிகாவின் பதில்.

மேலும், தன்னுடைய நிறத்தை மெருகேற்ற பல முயற்சிகளை மைனா நந்தினி மேற்கொண்டிருந்தார். என்ன தான் பியூட்டி பார்லர்? அழகுக்கான சிகிச்சை என்று செய்தாலும் இயற்கை அழகை என்றும் மாற்ற முடியாது. இயற்கை அழகாக மாற கொஞ்சம் தாமதமாகத்தான் ரிசல்ட் கொடுக்கும். ஆனால், உண்மையிலேயே பலன் மிகப்பெரிய அளவில் இருக்கும். அப்படித் தான் நம்முடைய மைனா நந்தினியும் கலராக மாறி இருக்கிறார். மேலும், இவருடைய அழகுக்கு சீக்ரெட் என்ன? என்று ரசிகர்களும் கேட்டு இருந்தார்கள். இந்நிலையில் மைனா நந்தினி ’மைனா விங்ஸ்’ என்ற தன்னுடைய யூடியூப் சேனலில் ரசிகர் கேட்ட கேள்விக்கு வீடியோ ஒன்று பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ஏபிசி ஜூஸ் என அழைக்கப்படும் ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஜூஸ் தான் என்னுடைய கலர் மாற்றத்திற்கு காரணம். சமீப காலமாக பல சின்னத்திரை நடிகர்கள் நடிகைகள் இதை தான் பேசி வருகிறார்கள். தோல் நீக்கப்பட்ட கேரட், பீட்ரூட், ஆப்பிள், இஞ்சி, புதினா இலை, எலுமிச்சை சாறு என அனைத்தையும் அரைத்து வாரத்திற்கு இரண்டு முறை குடித்தாலே போதும் கலர் சேஞ்ச் ரிசல்ட் நன்றாக கிடைக்கும். இதில் எந்த ஒரு செயற்கை கலவையும் இல்லையென்பதால் தைரியமாக எல்லோரும் குடிக்கலாம். அதைத் தான் நானும் பயன்படுத்தினேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. என்ன தான் நிறம் ஒருபக்கம் முக்கியமாக இருந்தாலும் சினிமாவில் திறமையும் முக்கியம் என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news