‘ஒன்னா நம்பர் ஐயோக்கியன்’ – ஜெய் பீம் படத்தில் வரும் காலண்டர் காட்சிகளை குறிப்பிட்டு பேசிய மாரிதாஸ். இயக்குனர் கொடுத்த பதிலடி.

0
1428
Maridhas
- Advertisement -

மக்களின் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாக ஜெய்பீம் இருக்கிறது. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்த படம் ஜெய்பீம். இந்த படம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட அநீதியையும், நடந்த உண்மை சம்பவத்தையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வன்னியர் சமூகத்தினர் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது. இதனால் வன்னிய சமூக மக்கள் ஜெய்பீம் படத்திற்கும், நடிகர் சூர்யாவிற்கும், இயக்குனருக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பி இருந்தனர். அதோடு பல எச்சரிக்கைகளையும் விடுத்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் ஞானவேல் அவர்கள் ஜெய் பீம் படம் குறித்தும், மக்களின் விமர்சனம் குறித்தும் விளக்கம் அளித்து கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியது, படத்தில் நான் 1995 ஆம் ஆண்டு குறிப்பதற்காக மட்டும் தான் அந்த காலண்டரை பயன்படுத்தினேன். மற்றபடி அந்த காலண்டரில் என்ன இருந்தது என்று கூட நாங்கள் கவனிக்கவில்லை. அப்படி ஏதாவது மக்களின் மனதை புண்படுத்தி இருந்தால் நான் வருந்துகிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதைப் பார்த்த யூடியூப் பிரபல மாரிதாஸ் இயக்குனர் கடிதத்திற்கு விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை போட்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : எப்படி கலர் ஆனீங்க ? ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த மைனா நந்தினி – அட ரொம்ப ஈசியான வழியா இருக்கே

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, ஒண்ணா நம்பர் அயோக்கியன் என்றால் அது ஜெய் பீம் படம் இயக்குநர் ஞானவேல் தான். இந்த படத்தில் ஒரு கேலண்டர் மட்டும் காட்டவில்லை. பல இடங்களில் 1995 வருட காலண்டர் காட்டப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் படத்தில் மெடிக்கல் ஷாப்பில் மருந்து சம்பந்தப்பட்ட கலண்டரை வைத்திருந்தார்கள். ரைஸ்மில்லில் உள்ள காலண்டரில் ரைஸ்மில் என்று இருந்தது. கருத்து சமுதாயக்கூடம் நடக்கும் இடத்தில் வார இதழ்கள் சம்பந்தப்பட்ட காலண்டரை வைத்திருக்கிறார்கள். அதேபோல் சூர்யா இருக்கக்கூடிய இடத்தில் சித்ரா என்ற காலண்டர் இருந்தது. காவல் அதிகாரி, வக்கீல் என எல்லோரும் இருக்கும் இடத்தில் அவர்கள் தொழில் சம்பந்தமான காலண்டர் இருந்தது.

ஆனால், வில்லன் காவல் அதிகாரி வீட்டில் மட்டும் அக்னி கலசம் தொங்கவிடப்பட்டு இருக்கும் காலண்டர் இருந்தது. இது வன்னியர் சமூகம் சம்பந்தப்பட்ட ஒரு லோகோ. அதை ஏன் அந்த காவல் அதிகாரி வீட்டில் வைக்கணும்? படத்தில் எல்லாம் திட்டம் போட்டு தான் இந்த மாதிரி எல்லாம் செய்திருக்கிறார்கள். இது எல்லாமே ஞானவேல் செய்த வேலை. ஆனால், அவர் எங்களுக்கு தெரியாமல் நடந்தது என்று சொல்வதெல்லாம் பொய். இது எவ்ளோ பெரிய அயோக்கியத்தனம்? இதனால் இவ்வளவு பெரிய சர்ச்சைகளை உருவாக்கி ஜாதி, சண்டை கலவரம் நடந்து கொண்டு இருக்கின்றது.

-விளம்பரம்-

இவருடைய கடிதம் பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களை விட நான் தான் பெரிய ஆள் என்று ஏற்றத்தாழ்வுகளை உருவாக்க வேண்டிய காட்சிகளை படத்தில் வைக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் கேவலமானவர்கள் என்று முத்திரை குத்தி இருக்கிறார்கள். இது தவறில்லையா? அயோக்கியத்தனம் இல்லையா? மேலும், இந்த காலண்டரை மாற்ற சொன்ன உடனே அவர்கள் சரஸ்வதி போட்டோ போட்ட காலண்டரை மாற்றிவிட்டார்கள். ஏன்? இப்ப சரஸ்வதி வைக்கணும். ஜீசஸ், அன்னைதெரேசா வைக்கலாம் அல்லவா? ஏன்னா, ஒரு சச்சரவு போய் கொண்டு இருக்கும் போது இன்னொரு சச்சரவை உருவாக்க வேண்டும் என்று தான் இதையெல்லாம் ஞானவேல் செய்கிறார்.

உள்நோக்கத்துடன் திட்டமிட்டு தான் இந்த காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இதுவரையும் பதில் சொல்லியிருந்த சூர்யாவும் காணவில்லை. படத்தோட தயாரிப்பாளர் சூர்யா எல்லாம் கேட்டு தான் பண்ணி இருப்பாரு. அப்ப எல்லா திட்டங்களிலும் சூர்யாவிற்கும் பங்கு உண்டு என்று சூர்யாவையும், இயக்குனர் ஞானவேலையும் பயங்கரமாக வைத்து செய்திருக்கிறார் மாரிதாஸ். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிய நிலையில் இதனை பார்த்த இயக்குனர் ஞானவேல் அவர்கள் டீவ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, “இது அயோக்கிய கும்பல். இப்படிக்கு மனிதருள் மாணிக்கம் மாரிதாஸ். அன்பான தமிழ் மக்களே, யோக்கியன் வந்துட்டாரு . மறக்காம சொம்ப எடுத்து உள்ள வைங்க.” இப்படி இயக்குனர் பதிவிட்ட டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement