எங்க பாத்தாலும் தங்கம், 7 ஸ்டார் ஹோட்டலில் மைனா செய்த சேட்டைகள் – ஒரு நைட் தங்க இத்தனை லட்சமாம்.

0
683
Myna
- Advertisement -

மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் மைனா நந்தினி. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நந்தினி நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அப்படியே இவர் தொடர்ந்து தமிழில் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இதனிடையே மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு பிறகு நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குனராக யோகேஸ்வரன் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான துருவன் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறான்.

- Advertisement -

பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என்று மைனா நந்தினி பிசியாக கலக்கிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் வெளியான சுந்தர் சியின் அரண்மனை 3 படத்தில் மறைந்த நடிகர் விவேக் ஜோடியாக மைனா நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருந்தது. இப்படி தொடர்ந்து நந்தினி பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் இவர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

மைனா-யோகி நடத்தும் யூடியூப் சேனல்:

இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதுமட்டுமில்லாமல் மைனா நந்தினியும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து மைனா விங்ஸ் என்ற பெயரில் யூடியூபில் தனியாக சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அதில் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் செய்யும் காமெடி வீடியோக்களை அதிகம் பதிவேற்றி வருகிறார். மேலும், இவர் பதிவிடும் வீடியோ எல்லாம் யூட்டூபில் படு வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இவர்கள் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். இந்நிலையில் தற்போது மைனா பதிவிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

dubai tour vlogs:

அது என்னவென்றால், கடந்த வாரம் மைனா மற்றும் யோகி இருவரும் துபாய் சென்று இருக்கிறார்கள். அங்கு அவர்கள் முதல் நாளில் இருந்து வீடியோக்களை dubai tour vlogs என்று பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அவர்கள் தங்கத்தாலான செவன் ஸ்டார் ஹோட்டல் ஒன்றை சுற்றி பார்க்க சென்ற வீடியோவை தங்களின் சேனலில் போட்டு இருக்கிறார்கள். அந்த வீடியோவில், நான்காவது நாள் என்று இருவரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். யோகி,இன்னைக்கு ஷாப்பிங் டே என்று சொல்கிறார். உடனே மைனா குதிக்கிறார். துபாயில் இருக்கும் 7 ஸ்டார் ஹோட்டலுக்கு இருவரும் முதலில் செல்கிறார்கள்.

7 ஸ்டார் ஹோட்டலின் ஸ்பெசல்:

அந்த ஹோட்டல் மொத்தமும் தங்கத்தால் ஆனது. அதோட அந்த ஹோட்டலில் உள்ள டாய்லெட் கூட தங்கத்தில் இருக்குமாம். அதை கொஞ்சம் எடுத்துக் கொண்டு வந்து விடலாம் என்று மைனா காமெடியாக சொல்கிறார். பின் இருவரும் அந்த ஹோட்டலில் உள்ள எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கிறார்கள். அப்போது மைனா அங்கிருக்கும் ஒரு கோப்பையின் மூடியை எடுத்து இது ஒன்று மட்டும் கிடைத்தால் என் வம்சமே நல்லா இருக்கும் என்று சொல்கிறார்.

ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்க ஆகும் செலவு:

உடனே அங்கிருந்த நபர் தயவு செய்து அதை வையுங்கள் என்று சொல்கிறார். பின் அந்த ஹோட்டலில் உள்ள ராஜா மற்றும் ராணி அறையை காண்பிக்கிறார்கள். பார்ப்போரை பிரமிக்க வைக்கும் அளவிற்கு அவ்வளவு அழகாக உள்ளது. அனைத்துமே தங்கத்தால் செய்து இருகிறார்கள். பாத்ரூம் முதற்கொண்டு எல்லாமே தங்கத்தில் செய்து இருக்கிறார்கள். மேலும், அந்த ஹோட்டலில் ஒரு நாள் இரவு மட்டும் தங்க 50 லட்சமாம். இப்படி அந்த ஹோட்டலில் நடந்த ஃபன் வீடியோவை மைனா- யோகி இருவரும் தங்களுடைய சேனலில் பதிவிட்டுகிறார்கள். தற்போது இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement