ஆண்ட்ரியாவின் அந்த போட்டோ ஷூட்டை அடுத்தது அவர் தான் – ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த காட்சியை நீக்கிய காரணம் குறித்து சொன்னமிஸ்கின்

0
279
Myskkin
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழ்த் திரையுலகில் பல ஆண்டுகளாக தனது சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் பின்னணி பாடகியும் ஆவார். முதலில் இவர் பின்னணி குரல் கொடுக்கும் நடிகையாக தான் சினிமாவில் அறிமுகமானார் அதற்கு பின்னர் தான் ஆண்ட்ரியா சினிமாவில் நடிகையாக மாறினார். அதிலும் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன்,வடசென்னை, மங்காத்தா, விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்களில் மூலம் தான் ஆண்ட்ரியா மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார்.

-விளம்பரம்-

பின் நடிகை ஆண்ட்ரியா பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் பல சூப்பர் ஹிட் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து இருக்கிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் வேற லெவலில் ஹிட் அடித்தது. சொல்லப்போனால் தெலுங்கு பாடலை விட தமிழ் பாடல் தான் மாபெரும் ஹிட் அடித்தது என்று கூறப்படுகிறது. இறுதியாக விஜய்யின் மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படத்தில் ஆண்ட்ரியா நடித்து இருந்தார்.

- Advertisement -

ஆண்ட்ரியா திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து நோ என்ட்ரி, வட்டம், மாளிகை, கா போன்ற பல்வேறு படங்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பிசாசு 2 என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ திரைப்படமும் ஒரு பேய் படமாக இருந்தது. அதோடு தமிழ் சினிமாவில் ஒரு பேயை அன்பான பேயாக காட்டியது என்றால் அது மிஸ்கின் படத்தின் மூலம் தான்.

பிசாசு 2 படம் பற்றிய தகவல்:

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார். மேலும், முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும் இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய மிஸ்கின் அவர்கள் கூறியிருந்தார். மேலும், கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மிஸ்கின் அளித்த விளக்கம் :

இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா 15 நிமிடம் நிர்வாண காட்சியில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார் மிஸ்கின். இதுகுறித்து பேசியுள்ள அவர் ”இந்தப் படத்தில் நிர்வாண காட்சிகளை படமாக்கவில்லை, புகைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. எனக்கும் ஆண்ட்ரியாவிற்கும் பொதுவான நண்பரான புகைப்பட கலைஞர் ஒருவர் தான் அந்த புகைப்படங்களை எடுத்தார். அதை நான் கூட பார்க்கவில்லை. இந்த படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த காட்சிகள் இடம் பெற்றால் சென்சார் போர்டில் ‘ஏ’ சான்றிதழ் தான் தருவார்கள். அதனால் குழந்தைகள் பார்க்க முடியாது என்பதால் அந்த காட்சிகளை நீக்கி விட்டேன்” என்று கூறியுள்ளார்.

15 நிமிட நிர்வாண காட்சி குறித்து கூறியது:

ஏற்கனவே இந்த படத்தில் நடித்தது குறித்து பேசிய ஆண்ட்ரியா, கொரோனா காரணமாக கிட்டத்தட்ட ஓராண்டு மேல் பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அந்த சமயத்தில் தான் பிசாசு 2 பட வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க மறுத்தேன். ஏனென்றால், 15 நிமிட காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடிக்க சொன்னார் இயக்குனர் மிஸ்கின். அதனால் நான் முடியாது என்று சொன்னேன். இருந்தும் அவர் என்னை கட்டாயப்படுத்தினார்கள். பின்னர் கதை தரமானதாக இருந்ததால் அந்த காட்சியில் நடிக்க நான் சம்மதித்தேன் என்று கூறி கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement