தன்னுடைய பிறந்தநாளுக்கு தன் அசிஸ்டன்ட் அனைவருக்கும் மிஸ்கின் கொடுத்துள்ள Gift – மிஸ்கினின் தம்பி நெகிழ்ச்சி.

0
351
myskkin
- Advertisement -

சின்ன வயதில் தனக்காக அண்ணன் செய்ததை மனம் திறந்து மிஷ்கின் தம்பி ஜி.ஆர் ஆதித்யா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். தற்போது இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார். முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும், இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்தில் மிஸ்கின் கூறியிருந்தார். இந்த படத்தை மிஸ்கின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பிசாசு 2 படம்:

கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மிஷ்கினின் தம்பி அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மிஸ்கின் உடன்பிறந்த தம்பி ஜி ஆர் ஆதித்யா. இவர் ஏற்கனவே சவரகத்தி என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது இவர் படம் ஒன்று இயக்கி வருகிறார். சமீபத்தில் இவர் பிரபல சேனலிடம் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் மிஷ்கின் குறித்து கூறியிருந்தது, அண்ணனிடம் பிடித்த விஷயம் எல்லோரிடமும் அன்பாக பழகுவது தான்.

மிஸ்கின் தம்பி அளித்த பேட்டி:

அடுத்து அவர் புத்தகம் படிப்பதும், சினிமாவை ஆழமாக நேசிப்பதும் பிடிக்கும். அவருடன் இருந்தால் போதும் படிக்க பழக்கம் இல்லாதவர்களையும் பெரிய வாசிப்பாளார் ஆக்கி விடுவார். மனிதர்கள் மீது மட்டுமில்லாமல் சினிமாவையும் ஒரு குழந்தை போல நேசத்தையும், பாசத்தையும் காட்டி வருகிறார். அதையெல்லாம் பார்க்கும் போது நமக்கும் சினிமா மீது காதல் வந்துவிடும். நான் அவருடன் பிறந்த தம்பி என்றாலும் பாசத்தை தனியாக பிரித்துப் பார்த்து காட்ட தெரியாதவர். அவருடன் இருக்கும் எல்லோரும் அவருக்கு தம்பிதான். அவர் சமமாக தான் நடத்துவார். எனக்கு ஒரு சட்டையை எடுத்துக் கொடுத்தால் அவருடன் பணி புரியும் அனைவருக்குமே அதே விலையில் சட்டை எடுத்துக் கொடுப்பார். மிஸ்கின் அண்ணன் தம்பிகளுக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் பண்ணுவார்.

-விளம்பரம்-

பிறந்தநாள் சர்ப்ரைஸ் கிப்ட்:

அந்த சர்ப்ரைஸ் பெரும்பாலும் சட்டையாக தான் இருக்கும். பொதுவாக பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு நாம் ஏதாவது கிப்ட் கொடுக்கணும் தான் நினைப்போம். அதில் அண்ணன் கொஞ்சம் வித்தியாசமானவர். அவர்தான் அவரோட பிறந்தநாளுக்கு எங்களுக்கு கிப்ட் கொடுப்பார். இந்த பிறந்த நாளுக்கும் அவரோட டீம் என்னுடைய அசிஸ்டன்ட் சேர்த்து 20 பேருக்கு 2500 ரூபாய் விலையில் சட்டை எடுத்துக் கொடுத்தார். எனக்கும் அதே விலையில் மஞ்ச கலர் சட்டை எடுத்துக் கொடுத்தார். ஒவ்வொருத்தருக்கும் அவரே சட்டையை தேர்ந்தெடுத்து இந்த கலர் உனக்கு நல்லா இருக்கும் சந்தோஷமாக இரு என்று வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்தினார்.

இசைமைப்பாளரான மிஸ்கின்:

ரொம்ப இளகிய மனம் கொண்டவர். மற்றவர்கள் சந்தோஷப்படுவதை பார்த்து சந்தோஷப்படுபவர். எனக்கும் அண்ணனுக்கும் 12 வயது வித்தியாசம் இருக்கும். அவர் ஒரு அப்பாவாகத்தான் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அண்ணனோட இசை திறமையை சிறுவயதிலிருந்தே நான் பார்த்து வந்தேன். இதனால் என்னுடைய படத்தில் அவர்தான் இசையமைக்க வேண்டும் என்று இசையமைப்பாளராகவும் அவரை அறிமுகப்படுத்தினேன். என் படத்திற்கு அண்ணன் இசையமைத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் சூப்பராக வந்திருக்கிறது. எல்லோருக்கும் அந்த பாடல் பிடிக்கும். அடுத்த ஆண்டு படம் வெளியாகிவிடும் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement