உதவி இயக்குனராக இருந்த போது மிஸ்கின் இத்தனை படத்தில் நடித்துள்ளாரே- புகைப்படங்கள் இதோ.

0
83378
mysskin
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களாக ஜொலித்து வரும் எத்தனையோ பேர் ஆரம்பத்தில் துணை இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் தான். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கினும் ஒருவர். இயக்குனர் மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் உதவி இயக்குனராக இருந்த போது இயக்குனர் மிஸ்கின் விஜய் படத்தில் நடித்துள்ளளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வின்சன்ட் செல்வா இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான யூத் படத்தில் மொட்டை தலையுடன் ஒரு சிறு காட்சியில் தோன்றியுள்ளார் மிஸ்கின்.

- Advertisement -

இதை தொடர்ந்து கதிர் இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் வைரஸ் ‘ படத்திலும், 2005 ஆம் ஆண்டு ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளியான ‘ஜித்தன் ‘ படத்திலும் மிஸ்கின் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்கின் இறுதியாக இயக்கிய சைக்கோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் விஷால் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. ஆனால், மிஸ்கின் – விஷால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஸ்கின் நீக்கப்பட்டார். தற்போது துப்பறிவாளன் படத்தை விஷாலே இயக்க முடிவெடுத்துள்ளார். அதே போல இயக்குனர் மிஸ்கின், ஆர் கே சுரேஷ்ஷை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement