மூட்டை தூக்கி பிழைத்து வரும் பருத்திவீரன் குட்டி சாக்கு – யூடுயூப் பேட்டி மூலம் கிடைத்த வாய்ப்பு.

0
1670
paruthiveeran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கார்த்திக். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கிறது. அந்தவகையில் கார்த்திக்கின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்த படம் பருத்திவீரன். இயக்குனர் அமீர் சுல்தான் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்திவீரன். இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் குட்டி சாக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் விமல்ராஜ்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு பின்னர் இவர் வேறு எந்த படங்களில் நடிக்கவில்லை. இதற்கு பிறகு இவர் என்ன ஆனார்? தற்போது என்ன பண்ணுகிறார்? என்று தெரியாத ஒன்றாக இருந்தது. இந்நிலையில் புஹாரி என்ற யூடுயூப் சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் குட்டி சாக்கு என்ற விமல்ராஜ் பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, என்னுடைய சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி பக்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமம். வேலைக்காக தினமும் உசிலம்பட்டியில் இருந்து மதுரைக்கு வந்து செல்கிறேன் .

- Advertisement -

குட்டி சாக்கு என்ற விமல்ராஜ் அளித்த பேட்டி:

சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். நான் இப்போது லோடுமேன் அதாவது சுமை தூக்கும் தொழிலாளி வேலையை நான்கு வருடமாக செய்து வருகிறேன். எனக்கு பருத்திவீரன் பட வாய்ப்பு கிடைக்கும்போது 6வது படித்துக்கொண்டிருந்தேன். தெரிந்த நபர்கள் மூலமாக என்னை பள்ளியில் விசாரித்தார்கள். அப்போது என்னுடன் நாலைந்து பேரை எடுத்தார்கள். பின் என்னையும், கருவாச்சி கதாபாத்திரத்தில் நடித்த அந்தச் சின்னப்பொண்ணும் என்னுடன் படித்தவர். நான் அதற்கு முன் எந்த படத்திலும் நடித்தது கிடையாது.

பருத்திவீரன் படத்தில் நடித்த அனுபவம்:

முதல் படத்தில் நடிக்க போகும் போது கொஞ்சம் தயக்கமும், பயமும் இருந்தது. அதற்கு பிறகு போகப்போக சரியாகப் போய்விட்டது. ஆரம்பத்தில் நடிக்கும்போது டயலாக்கை எழுதிக் கொடுத்து மனப்பாடம் பண்ண சொல்லுவார்கள். அதற்கு பிறகு நடித்தோம். ஒரு வருடம் பருத்தி வீரன் படத்திற்காக பள்ளி கூடம் ஒழுங்காகப் போகாமல் நடித்தேன். என்னுடைய கண்ணு தான் அந்த படத்திற்கு அடையாளமாக இருந்தது. அந்த கண்ணு அந்த மாதிரி ஆனதுக்கு காரணம் நான் தான். இந்த படத்தில் நடிப்பதற்கு 4 வருடத்திற்கு முன்பு குச்சி பட்டு கண் இந்த மாதிரி ஆகிவிட்டது. மருத்துவர்கள் இதை சரி பண்ண முடியாது அவ்வளவுதான் கண் போய்விட்டது என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

விமல்ராஜ் குடும்பம் :

எனக்கு இப்போதும் ஒரு பார்வை கிடையாது. மேலும், படம் வெளியே வந்த பிறகு எல்லோரும் பார்த்து பாராட்டினார்கள். என்னுடைய குடும்பத்தில் நானும், என்னுடைய தம்பி இருக்கிறான். அம்மா விவசாயம் பண்ணுகிறார்கள். அப்பா இறந்துவிட்டார். என் அப்பா இறக்கும் போது எனக்கு விபத்து ஏற்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் கோமாவில் இருந்தேன். அந்த சமயத்தில் தான் என் அப்பா இருந்தார். ரொம்ப வருத்தமாக இருந்தது. அப்பா இறந்தபோது அவர் கூட இல்லை நினைத்து ரொம்ப நாள் வருத்தப்பட்டு இருக்கிறேன். மேலும், பருத்திவீரன் படத்திற்கு பிறகு நான் மாடு, கோழிகளை வளர்ப்பதை சில வருடம் செய்து கொண்டிருந்தேன்.

விமல்ராஜ் செய்யும் வேலை:

பின் வேலை செய்ய ஆரம்பித்தேன். அப்போது அறியாத வயதில் வாய்ப்பு தேடிவந்தது. இப்ப நடிக்கணும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், யாரை பார்க்க வேண்டும் யாரிடம் கேட்க வேண்டும் என்று தெரியவில்லை. வாய்ப்பை தேடி அலைய நேரத்தில் வாழ்க்கையும் பார்க்க வேண்டும் என்பதால் தான் லோடுமேன் வேலைக்கு வந்துவிட்டேன். எனக்கு மாடுகள்,கோழிகள் வளர்ப்பது மிகவும் பிடிக்கும். இடையில் ஜல்லிக்கட்டு காளைகள், சண்டை சேவல் வளர்ப்பது போன்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் அந்த பேட்டியின் மூலம் விமலுக்கு மீண்டும் பட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதுகுறித்து அந்த யூடுயூப் உரிமையாளர் பதிவிட்டுள்ளதாகவது ‘இரண்டு நாட்களுக்கு முன்னர் ,முன்னனி பட தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அழைத்திருந்தார்கள்.குட்டி சாக்கு விமல்ராஜ் பேட்டியை பார்த்து,அடுத்த படத்துக்கான சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக சொன்னார்கள். படப்பிடிப்புக்கான லொகேசன் இன்ன பிற முன் தயாரிப்பு பயணிகளில் எல்லாம் சாத்தியமானால் விமல்ராஜுக்கு வாய்ப்பு கிடைக்குமென நம்புகிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement