“ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, ரஜினியே தான்” சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிய மிஸ்கின்

0
1014
- Advertisement -

எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர் மட்டுமில்லாமல் பன்முகம் கொண்டு திகழ்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிறது.

- Advertisement -

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்திற்கு பரத் சங்கர் இசை அமைகிறார். இந்நிலையில் தான் படத்தின் ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில் தான் நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி வரும் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மிஸ்கின் கூறியது :

மேலும் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. இந்த இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மற்றும் இந்த படத்தின் வில்லன் நடிகருமான மிஸ்கின் பேசுகையில் “சிவகார்த்திகேயனை முதலில் பார்த்த போது “நீ பெருசா சாதிக்கனும்” அப்படினு சொன்ன. அவர் இபபி சாதிச்சுட்டாரு. நடிகை சரிதா கூட சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினிகாந்த போல அடக்கமானவர் என்று கூறினார்.

-விளம்பரம்-

ஆனால் நான் சொல்கிறேன் ரஜினி போன்றவர் சிவகார்த்திகேயன் கிடையாது. சிவகார்த்திகேயன் ரஜினிதான் ஏற்றார். இதற்க்கு ஆராவாரம் ஆர்ப்பரித்து.இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பேசுகையில் “நான் சினிமாவின் தொடக்கத்தில் நடித்த மெரினா படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது வெறும் 50 பேர் மட்டுமே நடந்தது. ஆனால் தற்போது என்னுடைய படத்திற்கு இத்தனை ரசிகர்கள் வந்துள்ளார் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் சிவா.

இது என் வாழ்வில் சிறப்பான தருணம்.போன படம் கொஞ்சம் மிஸ் ஆகிவிடாது. ஆனால் இந்த படம் கண்டிப்பாக மிஸ் ஆகாது என்று கூறினார் சிவகார்த்திகேயன்.மேலும் நடிகை சரிதா பேசுகையில் “சிவகார்த்திகேயனுடைய தோற்றமும், அவருடைய பேசும் ரஜினிகாந்த போலவே இருப்பதினால் அவரை நான் இனிமேல் குட்டி ரஜினி என்று சொல்ல போகிறேன் என்றார் அவர். இந்நிலையில்

Advertisement