கொட்டுக்காளி படத்தின் ட்ரைலர் விழாவில் இயக்குனர் மிஸ்கின் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. கடைசியாக இவர் நடித்த கருடன் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனையும் செய்து இருந்தது. தற்போது சூரி நடித்து இருக்கும் படம் கொட்டுக்காளி.
இந்த படத்தை இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே கூழாங்கல் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கிறார். இந்தப்படத்தில் சூரி, அன்னா பென் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடை பெற்று வருகிறது.
ட்ரெய்லர் வெளியீட்டு விழா:
இந்த நிலையில் கொட்டுக்காளி படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்று இருக்கிறது. இதில் கொட்டுக்காளி படக்குழுவினர் உடன் சிறப்பு விருந்தினராக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் மிஸ்கின், இந்த படத்தை மக்கள் பார்ப்பதற்காக பல்டி, குட்டி கர்ணம் எல்லாம் போட்டாச்சு. இந்த படத்தை மக்கள் எல்லோரும் பார்ப்பதற்காக நான் அவுத்து போட்டு naked டான்ஸ் ஆடலாம் என்று இருக்கிறேன்.
மிஸ்கின் சொன்னது :
அதை வைத்து இந்த படத்தை போய் பாருங்கள் என்று சொல்லலாம்னு இருக்கிறேன். சிவகார்த்திகேயன் பட பூஜையின் போது தான் வினோத்தை பார்த்தேன். அப்போது அவர் கூழாங்கல் படத்தை பற்றி சொன்னார். எப்போது படம் வெளியாகும் என்று கேட்டதற்கு கூடிய விரைவில் என்றார். பின் அடுத்த படத்தை பொறுமையாக, கொஞ்சம் காலம் எடுத்து பண்ணுங்கள் என்று சொல்வதற்குள் படம் தொடங்கி விட்டேன் என்று சொன்னார்.
"#Kottukkaali: I'm ready to do a NAKED dance to reach the movie. There is no music director in the movie, which was like the director beat me in the SLIPPER. I'm ready to KISS director VinothRaj's Feet" – Mysskin pic.twitter.com/KJXqq02Hdh
— AmuthaBharathi (@CinemaWithAB) August 13, 2024
சூரி குறித்து சொன்னது :
நான் படத்திற்கு யார் இசையமைப்பாளர்? என்று கேட்டதற்கு அவர், யாரும் கிடையாது என்று சொன்னார். அப்படி அவர் சொல்லும்போது எனக்கு செம கோபம் வந்துவிட்டது. இதை நான் என்னுடைய அசிஸ்டன்ட் இடம் சொல்லி, தயவுசெய்து அந்த மாதிரி எல்லாம் படம் எடுக்காதீர்கள் என்று நான் அறிவுரை எல்லாம் சொல்லி இருந்தேன். ஆனால், இந்த படத்தை பார்க்கும்போது தான் தெரியுது அவன் என்னை செருப்பால் அடித்தான். நான் அவன் காலில் முத்தமிட தயாராக இருக்கிறேன்.
விழுந்து சிரித்த தொகுப்பாளினி :
மேலும், ஒரு காட்சியில் சூரி ஒரு இடத்தில் மூத்திரம் அடித்து இருக்கான். அதில் சூரி நடித்திருக்கிறான் என்பதைவிட வாழ்ந்திருக்கிறான் என்று தான் சொல்லணும். வினோத் அந்த காட்சியை அப்படியே ஒரு நாலு நிமிடம் எடுத்துக் கொண்டு செல்கிறார். நான், அந்த கேமராவை கீழே வைத்து விடுவானா என்று நினைத்தேன். ஆனால், அவர் கீழே காண்பிக்கவில்லை. அப்படியே சூரி திரும்பும் பார்க்கும் காட்சி வேற லெவல் என்று சொல்வதை கேட்டு அங்கிருந்த தொகுப்பாளினி விழுந்து விழுந்து சிரித்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.