சுந்தரி கேபி, கண்ணம்மா வினுஷா நடித்துள்ள ‘N4’ எப்படி ? முழு விமர்சனம் இதோ.

0
1131
N4
- Advertisement -

இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் N4. இந்த படத்தில் மைக்கேல் தங்கதுரை, வினுஷா தேவி, கேப்ரில்லா, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி, அழகு என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி. பாலசுப்பிரமணியம் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களின் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகிய நாவருமே பெற்றோர் இல்லாமல் அனாதையாக இருக்கிறார்கள். இவர்களை சிறுவயதிலேயே வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். பின் இவர்கள் வளர்ந்து சென்னை காசிமேடு பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். அப்போது கல்லூரி மாணவரான அக்ஷய் கமல் தன்னுடைய நண்பர்களுடன் அடிக்கடி காசிமேடு மீன்பிடி துறைக்கு வந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது போன்ற தேவையில்லாத வேலைகளை செய்து கொண்டிருப்பார்.

- Advertisement -

படத்தின் கதை:

மேலும், அந்த பகுதியில் N4 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக அனுபமா குமார் பணியாற்றி இருக்கிறார். இப்படி எல்லோருமே ஒரே பகுதியை சேர்ந்திருந்தாலும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாமல் தான் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் காசிமேடு பகுதியில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. இதனால் அனைவரும் ஒரு வட்டத்திற்குள் சந்திக்கும் நிலைமை ஏற்படுகிறது. அந்த சம்பவம் என்ன? அதனால் யார் யாருக்கு எந்தெந்த பிரச்சனைகள் ஏற்பட்டது? அதிலிருந்து தப்பித்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை.

நடிகர்கள் குறித்த தகவல்:

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாம் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். அதே போல் கேப்ரில்லா, வினுஷா தேவி இந்த படத்தின் மூலம் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிகர்களை இயக்குனர் தேர்வு செய்திருப்பது சிறப்பான ஒன்று. மேலும், படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சில கதாபாத்திரங்களும் அதில் நடித்து இருக்கும் இளைஞர்களும் சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் முழுக்க முழுக்க காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெறும் கதையை இயல்பாக காட்டி இருக்கிறது. படத்திற்கு பின்னணி செய்யும் ஒளிப்பதிவும் பக்கபலமாக இருந்திருக்கிறது. காசிமேடு மீன் பிடி துறைமுகம் மற்றும் அதை சுற்றி வசிக்கும் மனிதர்களுடைய வாழ்வை ஒரே வட்டத்திற்குள் கொண்டு வரும் ஒரு சம்பவத்தை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லர் பாணியில் இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் படம் ஆரம்பத்தில் ரொம்ப சுமாராக சென்றது. பார்ப்போருக்கு தொய்வை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம் .

படத்தின் அலசல்:

காரணம், ஏகப்பட்ட கதாபாத்திரங்களை காண்பித்திருப்பதால் பார்வையாளர்களுக்கு ஞாபகம் வைத்துக் கொள்வதில் கொஞ்சம் சிரமம். கதையுடன் அந்த கதாபாத்திரங்களை தொடர்புப்படுத்துவதற்கு இயக்குனர் கொஞ்சம் தடுமாறியே இருக்கிறார். அதேபோல் திரை கதையில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்ததால் படம் அருமையாக இருந்திருக்கும். இதனாலே பல இடங்களில் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆக மொத்தம் சுமாரான படமாக இருக்கிறது.

பிளஸ்:

நடிகர்களின் நடிப்பு சிறப்பு

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்

காசிமேடு மீன்பிடி துறைமுக மக்களுடைய வாழ்வியலை மையப்படுத்திய கதை

மைனஸ்:

முதல் பாதி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

இயக்குனர் கதைக்களத்தில் கவனம் செலுத்திருக்கலாம்

மொத்தத்தில் N4 படம்- இலக்கை அடையவில்லை.

Advertisement