இப்படி இந்த மனுசனா இதுநாள் வரை பாத்ததே இல்லையே – தந்தையின் இறுதி சடங்கில் அஜித்தின் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் உருக்கம்.

0
497
ak
- Advertisement -

அஜித் குமாரின் தந்தை இன்று காலமாகி இருக்கும் நிலையில் அவரது இறுதி சடங்குகள் தற்போது நடைபெற்று வருகிறது. தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யும் அஜித்தின் புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் மனமுடைந்து ஆறுதல் கூறி வருகிறார்கள். அஜித் குமார் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆனால், இவருடைய தந்தை தமிழ், தாய் சிந்தி. இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் ஆவார். அதில் அஜித் இரண்டாவது மகனாகப் பிறந்தார். கராச்சி பார்ட்டிஷன் போது அஜித்தின் அம்மா அங்கிருந்து வந்துவிட்டார்கள். பின் அஜித் தந்தை வேலை ட்ரான்ஸ்பர் போது ஹைதராபாத்திற்கே வந்துவிட்டனர்.

-விளம்பரம்-

அதற்கு பின்னர் இவர்கள் சென்னைக்கு வந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட்து. அஜித்தின் தந்தை சுப்ரமணி ஒரு பிராமின் அதனால் இவர் அசைவம் சாப்பிட மாட்டார் ஆனாலும் தங்கள் பிள்ளைகளும் அப்படியே இருக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னது கிடையாது. அவர்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிட அவர் அனுமதித்து இருக்கிறார் எதனை அஜித்தின் சகோதரர் அனில்குமார் பேட்டி ஒன்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் அஜித்தின் தந்தை மணி என்கிற சுப்ரமணி இன்று அதிகாலை காலமாகி இருக்கும் சம்பவம் அஜித் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கி0றது. கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததாக செய்திகள் வெளியாக இருந்தது. மேலும், அவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வந் சுப்பிரமணி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84.

அஜித் குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு :

இப்படி ஒரு நிலையில் அஜித்தின் குடுமபத்தினர் தங்கள் தந்தையின் இறப்பு குறித்து சோக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘எங்களது தந்தையார் திரு பி எஸ் மணி (85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல் நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்திலேயே உயிர் நீத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும் அக்கறையோடும் கவனித்து வந்தும் எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

-விளம்பரம்-

இயலாதமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்

எங்கள் தந்தையார் சுமார் 60 ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும் அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் இந்த துயர நேரத்தில் பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும் எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.

இரங்கலை E-மெயில் பண்ணுங்க :

எங்கள் தந்தையாரின் இறுதிச்சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம் எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும் இழத்தையும் புரிந்து கொண்டு குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும் இறுதிச் சடங்கு தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும் படி வேண்டிக் கொள்கிறோம். உங்களின் இரங்கல் செய்தியை [email protected]க்கு அனுப்புங்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisement