நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து அதிரடியாக நீக்கிப்பட்ட இரண்டு நடிகைகள்.

0
4966
naam
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. இப்படி ஒரு நிலையில் ன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியலகள் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இருந்து ரக்‌ஷா, ரேஷ்மி என்று இரண்டு நடிகைகளையும் அதிரடியாக நீக்கி உள்ளனர். இதுகுறித்து பேட்டி அளித்துள்ள ரக்ஷா, லாக்டௌன் அறிவிச்சதும் பெங்களூரு கிளம்பி வந்தேன். ரெண்டரை மாசம் கழிச்சு ஷூட்டிங்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. அப்ப பெங்களூரு, சென்னை ரெண்டு இடத்துலயுமே பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமா இருந்ததால எங்க வீட்டுல ஷூட்டிங்ல கலந்துக்க வேண்டாம்னாங்க.

ரக்‌ஷா

சென்னையில தங்கியிருந்தாக்கூட எப்படியாவது ஷூட்டிங்ல கலந்துக்க முயற்சி பண்ணியிருப்பேன். ஸ்டேட் விட்டு ஸ்டேட் வர்றதுல இ-பாஸ் மாதிரியான் நடைமுறைகள் வேற இருந்ததால, `என்னால கலந்துக்க முடியாது’ன்னு சொன்னேன். திரும்ப முழு லாக்டௌன் முடிஞ்சு மறுபடியும் ஷூட்டிங் தொடங்கினப்ப எனக்கு எந்த அழைப்பும் வரலை என்று கூறியுள்ளார். ஆனால், சமீபத்தில் ஷூடிங் துவங்கி இருக்கிறது. எனக்கு ஒரேயொரு வருத்தம் என்னன்னா, `இதுதான் சூழல், வேற வழி இல்லை’ன்னு எனக்குத் தகவல் சொல்லியிருக்கலாம் என்று வருந்தியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement