முத்துராசுவை கொன்றது யார் ? நீதி மன்றத்தில் சரணடைந்தவர் யார் பாருங்க. சரியான திருப்பம்.

0
74923
naam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா, ராஷ்மி என்று பலர் நடித்து இருந்தனர். ஆனால், கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுனில் ரக்‌ஷா, ரேஷ்மி என்று இரண்டு நடிகைகளையும் அதிரடியாக நீக்கினார்கள். தற்போது அவர்களுக்கு பதில் தற்போது வேறு நடிகைகள் நடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டு வருகிறது.

- Advertisement -

அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் வில்லனாக இருந்த முத்து ராசாவை யாரோ சுட்டு கொன்றுவிட்டனர். மாயனின் கடைசித் தங்கை ஐஸ்வர்யாவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு, அவரைப் படாதபாடு படுத்தி வந்தவர்தான் இந்த முத்துராசு. இவரை முகமூடி அணிந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன் சுட்டுவிட்டார்.

‘கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்?’ என்ற கேள்விக்குப் பிறகு இப்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் கேள்வி, ‘முத்துராசுவைச் சுட்டது யாரு?’ என்பது தான். இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகியுள்ள எபிசோடில் மாயன் கொலை பழியை ஏற்றிக்கொண்டு நீதி மன்றத்தில் சரணடைந்து இருக்கிறார். இதனை செந்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement